Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்ஃபீல் ஆன சைத்ரா.. கடைசி நாளாச்சே.. விட மனசே வரலையாம்! | Yaradi Nee mohini...

ஃபீல் ஆன சைத்ரா.. கடைசி நாளாச்சே.. விட மனசே வரலையாம்! | Yaradi Nee mohini team bids adieu to the first part


முதல் பார்ட் ஓவர்

முதல் பார்ட் ஓவர்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் யாரடி நீ மோகினி சீரியல் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே உருவாகி இருக்கிறது .இந்த சீரியலை முதலில் பேய் சீரியலாக எதிர்பார்த்து பின்பு வழக்கமான குடும்ப சீரியலாகத் தான் இருந்து வருகிறது. அதுவும் ஒரு கதாநாயகனுக்கு இரண்டு கதாநாயகிகள் போட்டி தான் இதில் ஹைலைட்.

அத்தை மகள்கள்

அத்தை மகள்கள்

இந்த சீரியலின் முத்தரசன் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவி இறந்த நிலையில் அவருக்காக இரண்டு அத்தை மகள்கள் போட்டி போடுகின்றனர் .அதில் ஸ்வேதா பணத்திற்காகவும் வெண்ணிலா உண்மையாக முத்தரசனை காதலித்தும் அவருக்காக போட்டி போடுகின்றனர் . அதில் வெண்ணிலாவுக்கு உதவியாக முத்தரசன் முதல் மனைவி பேயாக இருந்து உதவி செய்து வருகிறார் .ஸ்வேதா வெண்ணிலாவை தீர்த்துக்கட்டுவதற்காக பல முறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதே கதையைதான் நான்கு வருடமாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.

திடீர் முடிவு

திடீர் முடிவு

தற்போது இந்த சீரியலின் விறுவிறுப்பான கட்டத்தை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த சீரியல் திடீரென முடிக்கப் படுகிறது என்ற செய்தியைக் கேட்டதும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர் .ஆனால் நெட்டிசன்கள் இந்த சீரியல் எப்போது முடிப்பீர்கள் என்று ஆவலாக காத்திருக்கின்றனர் .ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சீரியல் டீம் இருந்து வருகிறது.

சைத்ரா ரெட்டி

சைத்ரா ரெட்டி

இந்த சீரியலில் ஸ்வேதாவாக நடித்து வந்த சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். அதில் இன்றே கடைசி நாள் சூட்டிங் என்கிறது மாதிரி பீலிங் காக வெளியிட்டிருக்கிறார் .அதில் நான் ஸ்வேதா ,வெண்ணிலா கேரக்டரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கேப்ஷன் போட்டிருக்கிறார் .

டாட்டா

டாட்டா

அதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அந்த வீடியோவில் ஹைலைட்டே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எனும் பாட்டு தான் இவர் வீடியோவை பிடித்துக் கொண்டு இருக்க மாடியிலிருந்து சீரியல் நடிகர்கள் ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் டாட்டா காட்டிவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் மிஸ் யூ என்று கமென்ட் போட்டு வருகின்றனர்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முத்தரசனாக நடிக்கும் ஸ்ரீகுமாரும் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திராவும் இருக்கும் போட்டோவை ஸ்ரீகுமார் வெளியிட்டிருக்கிறார் .இந்தப் போட்டோவை பார்த்ததும் இன்றுதான் கடைசி நாளா என்றும் உங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட் என்னவென்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் .இந்த போஸ்ட்க்கு நட்சத்திரா முத்து மாமா என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

உரிச்சு வெச்ச கோழியாய்… செம கிக்காக போஸ் கொடுத்துள்ள நடிகை காஜல் அகர்வால்! | Kajal Agarwal...

<!----> இந்தியன் 2 பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா தொடங்காதா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி இருக்க இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் ரசிகர்கள் செம அப்செட்டில் உள்ளனர். இதில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். <!----> செட் அமைத்து தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் ஆச்சாரியா திரைப்படத்தில் ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோருடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. <!----> இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கும் காஜலுக்கு இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் இயக்குனர் ததாகதா சிங்கா இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படத்திற்கு உமா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ...

Today's news

Latest offer's