ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

0
10

ஃபோர்டு இந்தியா நிறுவனம் மிக சமீபத்தில் தான் புதிய ஃபிகோ பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி மற்றும் 119 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

ஆனால் இந்த என்ஜின் உடன் முன்பு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது புதிய ஆட்டோமேட்டிக் மாடலின் மூலமாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது.

இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், என்ஜினின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும். மேலும், பெட்ரோல் என்ஜினிற்கு மட்டுமே புதியதாக டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் வழக்கம்போல் மேனுவல் டிரான்ஸ்மிஷனை மட்டுமே தொடர்கிறது.

ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

ரப்பி சிவப்பு, நிலவின் சில்வர், ஸ்மோக் க்ரே, வெள்ளை தங்கம் மற்றும் டைமண்ட் வெள்ளை என ஐந்து நிறத்தேர்வுகளில் வழங்கப்பட்டுள்ள ஃபிகோ பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் காரில் டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என்ற இரு வேரியண்ட்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் காரில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் வேரியண்ட் வாரியாக,

ஃபிகோ ஆட்டோமேட்டிக் டைட்டானியம்

 • காரின் உடல் நிறத்தில் பம்பர்கள், பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள்
 • ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்
  • ஃபாக் விளக்கு மற்றும் க்ரில் பகுதிகளில் க்ரோம் அலங்கரிப்பு
  • கருப்பு நிறத்தில் உட்புற கேபின்
  • உயரத்தை சரிச்செய்து கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை
  • அதேபோல், அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக்கூடியதாக பின் இருக்கை வரிசையில் தலையணை
  • ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்
   • ஃபோர்டுபாஸ் உடன் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
   • டிரைவிங் ஸ்டைலிற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம்
   • மேனுவல் ஏசி
   • உட்புறத்தில் பறித்து திறக்கூடிய கதவு கைப்பிடிகள்
   • ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்
    • எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு இறக்கை கண்ணாடிகள்
    • அழுத்து-பொத்தான் ஸ்டார்ட்
    • பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், அதி வேகத்தை எச்சரிக்கும் அமைப்பு, கேமிரா உடன் ரிவர்ஸ் பார்க்கிங் உதவி, இஎஸ்பி, டிசிஎஸ் & எச்.எல்.ஏ, சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் அமைப்பு உள்ளிட்டவை உள்ளன.

     ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

     ஃபிகோ ஆட்டோமேட்டிக் டைட்டானியம்+

     • ஃபாக் விளக்குகள்
     • பின் டிஃபாக்கர்
     • பின்பக்க வாஷர் & வைபர்
     • பின்பக்கத்தில் பார்சல் அலமாரி
     • ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல்
     • ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்
      • மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள்
      • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள்
      • ஓட்டுனரின் பக்கவாட்டிற்கும் காற்றுப்பைகள்
      • என்பவை டைட்டானியம் வேரியண்ட்டில் வழங்கப்படும் அம்சங்களுடன் டைட்டானியம்+ வேரியண்ட்டில் வழங்கப்படுகின்றன.

       ஃபோர்டு ஃபிகோ ஆட்டோமேட்டிக் காரை எந்தெந்த வசதிகளுக்காக தேர்வு செய்யலாம்? வேரியண்ட் வாரியாக ஓர் அலசல்

       இந்த கூடுதல் வசதிகள் எல்லாம் தற்போது பெரும்பான்மையான கார்களில் வந்துவிட்டன. இதனால் சற்று கூடுதல் தொகை செலவானாலும் பரவாயில்லை என டாப் டைட்டானியம்+ வேரியண்ட்டின் பக்கம் செல்வது சரியாக இருக்குமா என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here