
2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய்
இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கேரக்டர் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது ஹீரோயினாக மெஹ்ரின் பிர்சோடா நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ் பாபு முக்கியமான ரோலில் நடிக்க போகிறார். பாலிவுட் நடிக்க சஞ்சய் தத் வில்லன் ரோலில் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது. படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

சென்னையில் முக்கிய காட்சிகள்
ஏப்ரல் மாதம் சென்னையில் சில நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடத்தப்பட்டு, பிறகு ஐதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோசில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் ஷுட்டிங் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக படம் பற்றி எந்த தகவலும் வெளியே வராமல் ஷுட்டிங்கை நடத்தி வந்தனர். இதுவரை நடத்தப்பட்ட படப்பிடிப்பில் பாடல்கள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தான் இந்த பிரச்சனை
ஐதராபாத்தில் ஏற்கனவே படப்பிடிப்புகள் முடிந்தநிலையில், தற்போது சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘தளபதி 66’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டிலிருந்து கசியும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விஜய் மற்றும் குஷ்பூ ஆகியோரின் போட்டோக்கள் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான நிலையில், இன்று விஜய் சண்டைக் காட்சியில் நடிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதெப்படி விஜய் படத்திற்கு மட்டும் நடக்குது
ஒருபக்கம் விஜய் ரசிகர்களே இந்த போட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டாலும், மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களே இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில் போட்டோக்கள், வீடியோக்களை பரவுவதை படக்குழு தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மாஸ்டர், பீஸ்ட் என வரிசையாக விஜய் நடிக்கும் படங்களின் போட்டோக்கள், வீடியோக்கள் கசிந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிரடி முடிவெடுத்த படக்குழு
இதனால் அஜித்தின் ஏகே 61, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களை போல் படப்பிடிப்பு தளத்தில் இனி மொபைல் போன்களுக்கு அனுமதி கிடையாது என தளபதி 66 படக்குழுவும் முடிவு செய்துள்ளதாம். அதோடு நன்கு பரிசோதனை செய்த பிறகே படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும், மிக சிலரை மட்டுமே வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை படக்குழு எடுத்துள்ளதாம்.