
சென்சாரை அலற விட்ட ரசிகர்கள்
ஆரம்பத்தில் பீஸ்ட் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், தற்போது ரிலீஸ் தேதி பற்றிய கேள்வியை தான் அதிகம் கேட்டு வருகின்றனர். பீஸ்ட் ரிலீஸ் பற்றி இதுவரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் பல தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்சார் க்ளியரன்ஸ் கிடைக்க தாமதமானதால் தான் பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதமாகி வருவதாக கூறப்பட்டது. சென்சார் க்ளியரன்ஸ் அறிவிப்பு நேற்று வந்து விடும் என சொல்லப்பட்டதால், சென்சார் இணையதளத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் தேடியதால் அந்த இணையதளம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

பீஸ்ட் செம அப்டேட்
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளதாம். பீஸ்ட் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் 38 விநாடிகள். இந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பீஸ்ட் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

ரிலீஸ் தேதியும் வந்தாச்சா
ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் படம் ரிலீசாவது 99.9 சதவீதம் உறுதியாகி விட்டதாம். பீஸ்ட் வெளிநாட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான தொகைக்கு வியாபாரம் ஆகி உள்ளதாம். ரஜினி அல்லாத ஒருவரின் படம் வெளிநாட்டில் இவ்வளவு அதிகமான தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாம்.

டிரெண்டிங்கில் அதகப்படும் பீஸ்ட்
ஆக்ஷன் த்ரில்லர் படமான பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ரிலீஸ் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்ட தகவல் வெளியானதுமே ட்விட்டரில் #BeastFromAril13th என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் கருணாமூர்த்தி அதிக தொகை கொடுத்து வாங்கி உள்ளாராம். விஜய்யின் திரையுலக பயணத்திலேயே இந்த படம் தான் அதிக தொகைக்கு வெளிநாட்டு உரிமம் வியாபாரம் ஆன படமாம்.

அடுத்து என்னப்பா வர போகுது
பீஸ்ட் ரிலீஸ் பற்றிய மொத்த அப்டேட்டும் கசிந்து விட்டதால் விரைவில் மோஷன் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அறிவிக்க உள்ளதாம். அதைத் தொடர்ந்து டீசர், டிரைலர் ஆகியனவும் வெளியிடப்பட உள்ளதாம்.