அடுத்த “சேலஞ்ச்”க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்… உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்! | Prashanth is all set to begin his Challenge movie with Director A Venkatesh

0
16
அடுத்த “சேலஞ்ச்”க்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்… உறுதிப்படுத்திய இயக்குனர் ஏ. வெங்கடேஷ்! | Prashanth is all set to begin his Challenge movie with Director A Venkatesh


bredcrumb

News

oi-Vinoth R

|

சென்னை : நடிகர் பிரசாந்த் இப்பொழுது அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிம்ரனுடன் இணைந்து நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அந்தகனுக்குப் பிறகு சேலஞ்சுக்கு பிரசாந்த் தயாராக உள்ளதாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

ரீமேக் படங்களை

ரீமேக் படங்களை

திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் இருந்த நடிகர் பிரசாந்த் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வருகிறார். அதற்காக புதிய கதைகளில் நடிக்காமல் ரீமேக் படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

வரவேற்பை பெறவில்லை

வரவேற்பை பெறவில்லை

அந்த வகையில் சமீபத்தில் ஜானி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. எனவே இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதுன் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் இந்த படத்தை முதலில் இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருந்தார் ஆனால் அது கைகூடாமல் போக பின் பொன்மகள்வந்தாள் பட இயக்குனர் பெர்டிக் இயக்க ஒப்பந்தமானார் பின் அவரும் விலக இப்பொழுது தியாகராஜன் இந்த படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார்.

அந்தகன் படத்தில்

அந்தகன் படத்தில்

சில ரீல் ஜோடிகளை பார்த்தால் மட்டுமே ரியல் ஜோடிகளை போல தோன்றும் அந்த அளவிற்கு ஸ்கிரீன் பிரசன்ஸ் இருக்கும். பிரசாந்த் மாற்றும் சிம்ரன் ஜோடிக்கு அது அமைந்தது. இவர்கள் இருவரும் இந்த நடித்த ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தகன் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வர ரசிகர்கள் இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண ஆவலுடன் உள்ளனர்.

whatsappimage2021 07 27at5 31 04pm 1627394524

“சேலஞ்ச்”

அந்தகன் படப்பிடிப்பு லாக்டவுனுக்குப் பிறகு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தக்க போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் “சேலஞ்ச்” என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். “சேலஞ்ச்” கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்க இருந்தது. ஆனால் பிரசாந்த் அந்தாதுன் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது அதை நடித்து முடித்துவிட்டு கட்டாயம் “சேலஞ்ச்” படத்தை தொடங்கி விடலாம் என்று கூறியுள்ளார் என இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியுள்ளார். எனவே விரைவில் பிரசாந்த் அடுத்த “சேலஞ்ச்”க்கு தயாராக இருப்பது உறுதியாகிவிட்டது .

English summary

Director A Venkatesh is getting ready to do his Challenge movie with Actor Prashanth soon. At present Prashanth is busy with his Anthagan movie.

Story first published: Tuesday, July 27, 2021, 19:33 [IST]Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here