அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு… இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல… நாட்டுக்கே பெறுமை!

0
11
அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு… இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல… நாட்டுக்கே பெறுமை!

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

நாட்டின் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் டிவிஎஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தமிழகத்தின் ஓசூரை தலைமையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் ஓர் பிரபல தயாரிப்பே நமது அண்டை நாட்டில் விற்பனையில் கெத்து காட்ட தொடங்கியிருக்கின்றது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

டிவிஎஸ் தயாரித்து வரும் புகழ்மிக்க இருசக்கர வாகன மாடல்களில் ஒன்றாக என்டார்க் 125 ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரே விற்பனையில் ஓர் புதிய மைல்கல்லை எட்டியிருக்கின்றது. அதாவது, 50 ஆயிரம் யூனிட் விற்பனையைப் பெற்று சாதனைப் புரிந்திருக்கின்றது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

நேபாளத்தில் இன்னும் பல சர்வதேச நிறுவனங்களின் இருசக்கர வாகன தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை அனைத்திற்கும் கடும் போட்டியை வழங்கும் வகையில் டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 125 ஸ்கூட்டர் நல்ல விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

டிவிஎஸ் நிறுவனம் நேபாளத்தில் என்டார்க் 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஐம்பதாயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. மிக சமீபத்தில்தான் பிஎஸ்6 தர என்டார்க்கை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக ஐந்து வேரியண்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. டிஸ்க், ட்ரம், ரேஸ் எடிசன், ரேஸ் எடிசன் எஃப்ஐ மற்றும் சூப்பர் ஸ்குவாட் எடிசன் ஆகிய தேர்வுகளிலேயே என்டார்க் 125 கிடைக்கிறது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

இந்த ஸ்கூட்டருக்கு நேபாளியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க காரணமாக இருப்பதே அதன் சிறப்பம்சங்கள்தான். என்டார்க் 125 ஸ்கூட்டர் ஸ்போர்ட்ஸ் லுக்கிங், இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் நல்ல செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் ப்யூவல் இன்ஜெக்டட் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 9.1 பிஎச்பி திறனையும், 10.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது சிவிடி கியர்பாக்ஸில் இயங்கும்.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

என்டார்க் 125 ஸ்கூட்டரில் மிக முக்கிய அம்சமாக ஸ்மார்ட் எக்ஸ் கன்னெக்ட் சிஸ்டம் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை கையாள பிரத்யேக டிவிஎஸ் கன்னெக்ட் எனும் சிறப்பு செயலி வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஸ்கூட்டரையும், செல்போனையும் இணைக்கையில் நேவிகேஷன், பயண விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

என்டார்க் 125 ஸ்கூட்டர் மேட் ரெட், மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் ரெட், மெட்டாலிக் நீலம் ஆகிய நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் ரேஸ் எடிசன் மட்டும் சிவப்பு-கருப்பு மற்றும் மஞ்சள்-கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புகழ்மிக்க இருசக்கர வாகனத்திற்கு நேபாளத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அண்டை நாட்டில் வெற்றி நடை போடும் தமிழக தயாரிப்பு... இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல... நாட்டுக்கே பெறுமை!

125சிசி பிரிவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. இதனை இந்தியா மற்றும் நேபாளம் மட்டுமின்றி உலகின் 19 நாடுகளுக்கு டிவிஎஸ் ஏற்றுமதி செய்து வருகின்றது. தென் ஆசியா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஏசியன் ஆகிய நாடுகளில் டிவிஎஸ் என்டார்க் 125 விற்பனைக்குக் கிடைக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here