Homeதமிழ் Newsஆரோக்கியம்அதிவேக பயணம்... தறிகெட்டு ஓடிய கார் கோர விபத்து... பலியான இளம் நடிகை...| High Speed...

அதிவேக பயணம்… தறிகெட்டு ஓடிய கார் கோர விபத்து… பலியான இளம் நடிகை…| High Speed Journey Car Accident Young Actress killed


தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வெப்சீரிஸிலும் நடித்துள்ளவர் காயத்ரி. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் 25 வயது நண்பரான ரோகித்துடன் பங்கேற்றார். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் மதுபோதையில் இருந்த ரோகித்துடன் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டியதால் கச்சிபௌலி அருகே, ஹெச்.எம்.டி மலைப் பகுதியில் கார் விபத்தில் சிக்கியது. தறிகெட்டு ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது மோதி தலைகீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. 

மேலும் படிக்க | பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதிவு

Actress

மேலும் படிக்க | இந்தியன் 2 செட்டில் கிரேன் விபத்து!! நடிகை காஜல் அகர்வால் டிவீட்

அந்த நேரம் தோட்ட வேலைக்காக சென்றுகொண்டிருந்த மகேஷ்வரி எனும் பெண்ணின் மீதும் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மகேஷ்வரி மற்றும் காயத்ரி உயிரிழந்தனர். மதுபோதையில் காரை ஓட்டிச்சென்ற ரோகித் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகை காயத்ரி உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Taapsee confirms Samantha powerful role

Taapsee Pannu is a popular name in Indian film Industry. She is doing multiple films in Hindi and Telugu. Taapsee has now launched...