அந்தகன் பட ரிலீஸ் எப்போ…படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட் | Prasanth starring Andhagan movie will slated to september release

0
9
அந்தகன் பட ரிலீஸ் எப்போ…படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட் | Prasanth starring Andhagan movie will slated to september release


தமிழில் ரீமேக் ஆன அந்ததுன்

தமிழில் ரீமேக் ஆன அந்ததுன்

தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் பிரசாந்த். பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்துள்ள படம் இது. இந்த படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே தயாரித்து, இயக்கி உள்ளார்.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக வனிதா

ஸ்டார் மூவீஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த்துடன் சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா விஜயக்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகிபாபு, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி போலீசாகவும், அவரது மனைவியாக வனிதா விஜயக்குமாரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

மிகுந்த பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷுட்டிங் ஜுலை 28 ம் தேதியுடன் நிறைவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் ஆகஸ்ட் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளது.

படம் எப்போ ரிலீஸ்

படம் எப்போ ரிலீஸ்

ஆகஸ்ட் மாதத்திலேயே படத்தின் அத்தனை வேலைகளையும் முடித்து, செப்டம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, தியேட்டரில் படம் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது ஓடிடி.,யில் படம் ரிலீஸ் செய்யப்படுமா என்ற தகவல் உறுதியாக வெளியாகவில்லை.

கார்த்திக் நடித்து முடித்து விட்டாரா

கார்த்திக் நடித்து முடித்து விட்டாரா

இதற்கிடையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கார்த்திக்கிற்கு காலில் காயம் ஏற்பட்டதால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டாரா, அப்படி முடிக்கவில்லை என்றால் படத்தை எப்படி தொடர்வார்கள், திட்டமிட்டபடி செப்டம்பரில் படம் ரிலீஸ் செய்யப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here