Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

''அந்தத் திட்டை நான் ஏன் வாங்கணும்?"- கருணாஸ் விளாசல்!


கருணாஸ் இப்போது கதை நாயகனாக ‘ஆதார்’, கார்த்தியுடன் ‘விருமன்’ சசிகுமாருடன் ஒரு படம் என நடிப்பில் பிஸியாக இருப்பவர். ‘சல்லியர்கள்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். ”இன்னிக்கு சூழல்ல படம் எடுக்கறதோ, இயக்குறதோ பெரிய விஷயமில்ல. அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கறதுதான் பெரிய விஷயமா இருக்கு!” என்றவர், இப்போது அரசியல் பக்கம் திரும்புவதில்லை. டைரி முழுக்க நடிப்புக்காக மட்டுமே தேதிகளைக் குறித்து வைத்திருக்கிறார்.

“அரசியலை மிஸ் பண்றீங்களா…?”

”இல்லவே இல்லீங்க. அரசியலுக்கு விரும்பி போனதில்ல. ‘இந்த ஹோட்டல்ல சாப்பிட்டா நல்லா இருக்கும்’னு பத்து பேர் சொல்றாங்க. சரி அங்கேப் போய் சாப்பிட்டு பார்ப்போமேனு நினைக்கறோம். போய் பார்த்ததும்தான் அதை வாயிலேயே வைக்க முடியலைனு தெரியுது. சரி, அவ்ளோதான். இக்கரைக்கு அக்கரை பச்சைதான் என்கிற மாதிரி இந்த கரையில இருக்கற அதே புல்லுதான் அக்ரையிலும் இருக்குது. அதான் நான் பார்த்த அரசியல்.”

karunas324
ஆதார் டீம்..

” ‘அசுரன்’ படத்துக்கு பிறகு உங்க பையன் கென்னுக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்திட்டிருக்கும். அதுல உங்க பங்கு என்ன?”

”அந்த வேலையை நான் செய்யமாட்டேன். சில ஹீரோக்களுக்கு அப்படி ஆகியிருக்கு. அவங்க அப்பாக்கள் பெரிய இயக்குநர்களா இருந்திருப்பாங்க. கதையை அவங்க கேட்டுட்டு நல்லாயில்லைனு சொல்ற படங்கள் சூப்பர்ஹிட் ஆகிடுது. அப்ப அந்த ஹீரோவுக்கு மனசுல என்னாவாகும்? ‘அருமையான கதை கிடைச்சிடுச்சு. எங்க அப்பந்தான்டா கெடுத்துட்டான்’னு திட்டுவாங்க. அந்த திட்டை நான் ஏன் வாங்கணும்? அதனால எந்த கதை வருதோ… அதை நீயே கேட்டுக்கோனு சொல்லிட்டேன். உனக்கு பிடிச்சிருக்குனு சொல்றியா… அதை நான் ஒருவாட்டி கேட்டுக்கறேன்னு சொல்வேன்.

தவிர, கென் இப்ப தனுஷ் சார்கிட்ட ஒர்க் பண்றார். வீட்ல என்னைக்கூட பாத்துறலாம் போலிருக்கு. அவரை பார்க்கவே முடியல. இந்த வயசில டைவர்ஷன் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்புகள் பரந்து கிடக்கற இந்த உலகத்துல, அவருக்கு பிடித்த ஒரு விஷயத்தை மட்டுமே நோக்கி பயணம் பண்றார். அவர் என் புள்ளைங்கறதுக்காக மட்டும் இதை சொல்லல. அந்த மாதிரி எல்லா புள்ளைங்களும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.”

karunas
‘விருமன்’ ஸ்பாட்டில்..

“நாலு படங்களுக்கு இசையமைச்சிருக்கீங்க. நிறைய தனியிசை ஆல்பங்கள் பண்ணிருக்கிங்க . இசையமைப்பாளர் கருணாஸ் என்ன ஆனார்?”

”ஐயாயிரமோ ஐநூறோ… ஊர் கோவில் திருவிழாக்களுக்கும், கல்யாண வீட்டுக்கும், காது குத்து வீட்டுக்கும், சாவு வீட்டுக்கும் நான் பாடுன காலங்கள்ல இருந்த சந்தோஷங்களை ரொம்பவே மிஸ் பண்றேன். நூறு சதவிகிதம் சந்தோஷமா சொல்றேன். அந்த கிராமிய பாடகன். கானா பாடகன் கருணா, தனக்கு தெரிஞ்ச எதோ ஒரு ட்யூனை வச்சு, மக்களை ஆட வச்சிருவான். ஒரு ட்யூனை பிடிச்சு கம்போஸ் பண்ணியிருக்கேன். அஞ்சு லட்ச ரூபாய்க்கும் கம்போஸ் பண்ணியிருக்கேன். அந்த மேடை, அந்த குழுவோட பத்து வருஷமா பயணிச்சிருக்கேன். கிரேஸ் எல்லாம் அங்கேதானே அறிமுகமானாங்க… என் இசைக்குழுவிலிருந்து எத்தனையோ மியூசிஷியன்ஸ் உருவாகியிருக்காங்க. அதை மிஸ் பண்றேன்…”Source link

cinema.vikatan.com

மை.பாரதிராஜா

Today's Feeds

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading