Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை - இந்தியா தகுதி பெற்றது...

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football


செய்திப்பிரிவு

Last Updated : 15 Jun, 2022 06:23 AM

Published : 15 Jun 2022 06:23 AM
Last Updated : 15 Jun 2022 06:23 AM

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது பகுதி நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் 5 சிறந்த அணிகளும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

தகுதி சுற்று தொடரில் ‘டி‘ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கம்போடியாவை தோற்கடித்து 6 புள்ளிகள் பெற்றிருந்தது. இதே பிரிவில் ஹாங்காங் 6 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடம் வகித்திருந்தது.

இதற்கிடையே ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாலஸ்தீனம் தனது கடைசி ஆட்டத்தில் நேற்று பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது பாலஸ்தீனம் அணி. பிலிப்பைன்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்த போதிலும் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

பிலிப்பைன்ஸ் வெளியேறியதால் டி பிரிவில் நேற்றைய நிலவரப்படி 2-வது இடம் வகித்த இந்திய அணியும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டிக்கு முன்னதாகவே தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதன்முறை. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி 5-வது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 1964, 1984, 2011, 2019 ஆகிய ஆணடுகளிலும் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருந்தது.





Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

“மனிதகுலத்தின் தொட்டிலில்” ஹோமினின் புதைபடிவங்கள் சிந்தனையை விட ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்

தென்னாப்பிரிக்காவின் ஸ்டெர்க்ஃபோன்டைன் குகைகளில் நான்கு வெவ்வேறு ஆஸ்ட்ராலோபிதேகஸ் கிரானியா கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மற்றும் பிற ஆஸ்ட்ராலோபிதேகஸ் புதைபடிவங்களைக் கொண்ட ஸ்டெர்க்ஃபோன்டைன் குகை நிரப்பு 3.4 முதல் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு...