Homeசினிமா செய்திகள்ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா இருந்தது... மேடையில் ஓப்பனாக பேசிய மஹிமா நம்பியார்! |...

ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா இருந்தது… மேடையில் ஓப்பனாக பேசிய மஹிமா நம்பியார்! | I had a different idea on actor arya, mahima nambiyar open talk on stage


 பள்ளி மாணவியாக

பள்ளி மாணவியாக

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் க்யூட் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஹிமா நம்பியார். மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தமிழில் சாட்டை என்ற படத்தில் நடித்தார். சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த மஹிமா நம்பியார் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர்,அண்ணாதுரை, கொடிவீரன், மகாமுனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, அசுரகுரு என தொடர் வெற்றிப் படங்களில் நடித்தார்

 விஜய் ஆண்டனியின் ரத்தம்

விஜய் ஆண்டனியின் ரத்தம்

இப்போது தமிழில் ஐயங்கரன் மற்றும் விஜய் ஆண்டனியின் ரத்தம் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மஹிமா நம்பியார் படவிழா ஒன்றில் ஆர்யா குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

 பெண் போராளியாக

பெண் போராளியாக

நடிகர் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி. சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது. இதில் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா ரவிசந்திரன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். பல படங்களில் க்யூட் நடிகையாக வந்து சென்ற மஹிமா நம்பியார் இதில் பெண் போராளியாக நடித்து அசத்தியிருப்பார். மகாமுனி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றிருப்பார்.

 ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா

ஆர்யா மேல எனக்கு வேற ஐடியா

இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய மஹிமா நம்பியார் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் வரையிலும் அவர் மேல வேற மாதிரி ஐடியா இருந்துச்சு… ஆர்யாவின் முந்தைய படங்களை பார்த்துவிட்டு படப்பிடிப்பில் சீரியஸாக இருக்க மாட்டார் ஜாலியாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் ஆர்யாவை முதல் முறையாக சந்தித்த பிறகு எனக்கு இருந்த மொத்த ஐடியாவும் தப்பு என்பதை உணர்ந்தேன்.

 இப்போ மரியாதை ரொம்ப அதிகமாயிடுச்சு

இப்போ மரியாதை ரொம்ப அதிகமாயிடுச்சு

நான் எப்போதுமே படப்பிடிப்புக்கு போகும்போது என்னுடைய ஷாட்டுக்கு முன்னாடி 10 நிமிடம் முன்னாடி இருக்க வேண்டும் டயலாக்ஸ் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா 30 நிமிடங்களுக்கு முன்பாகவே டயலாக் எல்லாம் பார்த்துக்கொண்டு அங்கு இருப்பார். நான் இதுவரைக்கும் ஒர்க் பண்ண ஹீரோக்களிலேயே ரொம்பவும் அட்மயர் பண்றது ஆர்யாவைத்தான். ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு அவர் மேல எனக்கு மரியாதை ரொம்ப அதிகமாயிடுச்சு. இவ்வாறு ஆர்யா குறித்து மஹிமா நம்பியார் படவிழாவில் ஓப்பனாக பேசியுள்ளார்.Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

இந்த 5 உணவுகள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்னு ஆய்வுகள் நிரூபிச்சிருக்காம்… மறக்காம சாப்பிடுங்க…! | Foods That Are...

<!----> அன்னாசி பெரும்பாலான பழங்களில் பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, ஆனால் இந்த வெப்பமண்டல இனிப்பு மற்றும் சிட்ரஸ் பழம் சிறுநீரக நோயாளிகளுக்கு உண்மையில் மிகவும் நன்மை வாய்ந்தது. இதற்கு காரணம் அதன் குறைவான பொட்டாசியமாகும், இது சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படும் போது பாதுகாப்பான விருப்பமாக உள்ளது. உணவில் ஒரு சிறிய பகுதியை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செல் மீளுருவாக்கம் செய்யவும் உதவும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற இயற்கை நொதி உள்ளது, இது உடலில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, அன்னாசி நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. <!----> குடை மிளகாய் மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது இந்த வண்ணமயமான மிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. கூடுதலாக குடைமிளகாயில் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை மாற்ற உதவுகிறது. கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, இந்த வண்ணமயமான மிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. <!---->...