ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. RJ பாலாஜி முதன்முறையாக த்ரில்லர் படத்தில் நடிக்கும் இப்படத்தை தியான் புகழ் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.
ரன் பேபி ரன் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சர்தார் மற்றும் காரி படங்களுக்குப் பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.