ஆல்தோட்ட பூபதி நானடா… தம்பியுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் ! | Actress Keerthy Suresh dance video goes viral

0
14
ஆல்தோட்ட பூபதி நானடா… தம்பியுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் ! | Actress Keerthy Suresh dance video goes viral


அறிமுகம்

அறிமுகம்

நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படமான பைலட் திரைப்படத்தில் தான் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த படத்தை அடுத்து ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற முக்கியமான வேடத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் தனக்கே உரித்தான இயல்பான குணத்தில் நடித்திருப்பார். இதையடுத்து, ரஜினி முருகன், தொடரி, ரெமோ,பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்தகூட்டம் என மளமளவென்று இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தேசிய விருது

தேசிய விருது

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான நடிகையர் திலகம் திரைப்படத்தில், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சினிமா வட்டாரத்தில் அனைவரிடத்திலும் நல்ல பெயர் எடுத்தார். மேலும் இப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

சோலோ ஹீரோயின்

சோலோ ஹீரோயின்

இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பென்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த 3 திரைப்படங்களும் ஒடிடியில் வெளியாகின.

டான்ஸ் வீடியோ

டான்ஸ் வீடியோ

ரசிகர்கள் மத்தியில் தேவதைப்போல் வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாட்டுக்கு இறங்கி குத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் சும்மா கேஷூவலா தம்பியுடன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here