இதுவல்லவோ வியாபார யூக்தி!! நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!

0
10
இதுவல்லவோ வியாபார யூக்தி!! நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!

இதுவல்லவோ வியாபார யூக்தி... நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!!

கொரோனாவினால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இப்போதாவது பரவாயில்லை, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கிய கடந்த ஆண்டு துககத்தில் எல்லாம் யாரும் தங்களது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.

இதுவல்லவோ வியாபார யூக்தி... நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!!

பிழைப்பிற்காக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்றோர் எந்தவொரு வேலையும் இல்லாததினால் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினர். பிறகு அந்த நிலை மெல்ல மெல்ல சீராகி வந்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமெடுக்க ஆரம்பித்தது.

இதுவல்லவோ வியாபார யூக்தி... நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!!

இதனால் பலர் மீண்டும் வேலையில்லாமல் கிடைத்த வேலையினை செய்ய வேண்டிய சூழல் உருவானது. நன்கு படித்த பட்டதாரிகள் கூட வயிற்று பிழைப்பிற்காக அப்போதைக்கு கிடைத்த வேலையினை தற்போது வரையில் பார்த்து வருகின்றனர்.

இதுவல்லவோ வியாபார யூக்தி... நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!!

ஆனால் நாம் இந்த செய்தியில் பார்க்கபோவது, தனது சாமர்த்தியமான செயலால் சலூன் வியாபாரத்தில் கல்லா கட்டி வரும் இளைஞரை பற்றி. கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் பகுதியை சேர்ந்தவர் ஷிவப்பா. முடிவெட்டும் தொழிலாளியான இவர் கொரோனாவால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளினால் வேலையை இழந்துள்ளார்.

இதுவல்லவோ வியாபார யூக்தி... நடமாடும் சலூன் கடை மூலம் நாளுக்கு ரூ.1,500 கல்லா பார்த்துவரும் இளைஞர்!!

ஏனெனில் சமூக இடைவெளியின்றி பார்க்க வேண்டிய தொழிலான முடிவெட்டுதலுக்கு தான் அரசாங்கம் முதலாவதாக தடையை விதித்தது. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போன ஷிவப்பாவிற்கு புதிய யோசனை ஒன்று தோன்றியுள்ளது.

நடமாடும் காய்கறி கடைகளை போன்று நாம் ஏன் நடமாடும் சலூன் கடையை ஆரம்பிக்கக்கூடாது என்கிற யோசனை தான் அது. இதற்காக சிறிய ரக கூட்ஸ் ஆட்டோ ஒன்றை சலூன் கடையாக மாற்றியவர், தற்போது தான் வசிக்கும் பகுதி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் சென்று வருகிறார்.

இதனால் அவர் எதிர்பார்த்தை காட்டிலும் பணம் கொட்டோ கொட்டு கொட்டுகிறதாம். இதுகுறித்து ஷிவப்பா கூறுகையில், என்னுடைய இந்த புது வெளிநாட்டவரின் ஃபேஸ்புக் ஃபோட்டோவை பார்த்து வந்தது. முதலில் சலூனில் வேலைப்பார்க்கும் போது மாதத்திற்கு ரூ.10,000 சம்பாதித்தேன்.

ஆனால் தற்போது மொபைல் சலூன் மூலம் நாள்தோறும் ரூ.1,500ல் இருந்து ரூ.2,000 வரையில் சம்பாதிக்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். சிக்கமகளூர் முழுவதும் தனது வாகனத்தில் சுற்றியதன் மூலம் ஷிவப்பா தனது தொலைப்பேசி எண்ணை அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவே அவரது வியாபாரம் பெருகுவதற்கு முக்கிய அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here