Sportsவிளையாட்டு செய்திகள்’இது அதுல’- ரிவைண்ட் செய்ய வைக்கும் சுவாரசியங்கள்.! 2007 -2022 இந்திய...

’இது அதுல’- ரிவைண்ட் செய்ய வைக்கும் சுவாரசியங்கள்.! 2007 -2022 இந்திய அணி ஒரு பார்வை.!

-

’இது அதுல’- ரிவைண்ட் செய்ய வைக்கும் சுவாரசியங்கள்.! 2007 -2022 இந்திய அணி ஒரு பார்வை.!

2022 டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே இறுதி ஓவர் வரைக்கும் போராடி பாகிஸ்தான் அணியை வென்று, ஒரு திரில்லர் வெற்றியை ருசித்திருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்ற முந்தைய இந்திய அணிக்கும், தற்போதைய இந்திய அணிக்கும் உள்ள பல்வேறு சுவாரசியமான விசயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விலகிய நிலையில், இந்தியாவின் பவுலிங் லைன்-அப் மீது பல தரப்பட்ட விமர்சனங்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. பலர் இந்த இந்திய அணியே தேராது என்று கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

பொதுவாகவே வெற்றி கேப்டன் என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான இந்திய அணி மட்டுமில்லாது, முந்தைய உலகக்கோப்பை அணியான கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கூட, பவுலிங்,பேட்டிங், பீல்டிங் என முழுமையான அனைத்து கட்டங்களையும் டிக் செய்து கொண்டு உலகக்கோப்பைக்குள் நுழைந்த அணிகள் கிடையாது.

அணியில் குறைகள் இருந்தாலும் அணியில் இருந்த அனைத்து வீரர்களும் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹீரோக்களாக மாறியதால் தான் உலகக்கோப்பை என்னும் அந்த மகுடத்தை நம்மால் தட்டித் தூக்க முடிந்தது. பார்மில் இருக்கக்கூடிய வீரர்கள் அதில் சற்று முன்னிலையில் இருந்தார்களே தவிற இவர் தான் அணிக்கு பெரிய பலம் என்றில்லாது அனைத்து வீரர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். அப்படிபட்ட டீம் பர்ஃபாமன்ஸ் என்பது இந்த இந்திய அணியிடமிருந்தும் தற்போது கிடைத்துள்ளது.

Where are India's 2011 World Cup winners? - India Today

2007-2022ஆம் ஆண்டுகளின் உலகக்கோப்பை அணிகளின் சுவாரசியான ஒற்றுமைகள்

* முதல்முறையாக எம்.எஸ்.தோனி டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனாக பொறுப்பேற்றபோது தான் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு மகுடம் தருவித்தது. அந்த வகையில் ரோகித் சர்மாவும் முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்துகிறார்.

* தோனி – ரோகித் என இரண்டு கேப்டன்களுமே ஒவ்வொரு போட்டிக்கும் என்ன தேவை என்பதை முன்கூட்டியே சரிசெய்துகொள்ளும் அனாலிடிகல் கேப்டன்ஸ். அதனால் தான் எப்போதும் சிஎஸ்கே – மும்பை அணிகளுக்குமான போட்டி சிறப்பானதாகவே இருக்கும்.

image

* 2007ல் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆர் பி சிங் – 2022ல் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் ( பவர் பிளேவில் லீடிங் விக்கெட் டேக்கர்ஸ்)

* 2007ல் இர்ஃபான் பதான் ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்- 2022ல் புவனேஷ்வர் குமார் ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்

* 2007ல் ஸ்ரீசாந்த் விக்கெட் டேக்கிங் பவுலர்- 2022ல் ஷமி விக்கெட் டேக்கிங் பவுலர்

* 2007ல் ஜொகிந்தர் ஷர்மா மீடியம் வேரியேசன் பவுலர்- 2022ல் ஹர்சல் பட்டேல் மீடியம் வேரியேசன் பவுலர்

* 2007ல் ஹர்பஜன் சிங் அனுபவமுள்ள ஸ்பின்னர்- 2022ல் ஆர் அஸ்வின் அனுபவமுள்ள ஸ்பின்னர்

* 2007ல் தினேஷ் கார்த்திக் கூடுதல் விக்கெட் கீப்பர்- 2022 ரிஷப் பண்ட் கூடுதல் விக்கெட் கீப்பர்

* 2007ல் யுவராஜ் சிங் மேட்ச் வின்னிங் டாப் ஆர்டர் பேட்டர் – 2022ல் விராட் கோலி மேட்ச் வின்னிங் டாப் ஆரடர் பேட்டர் ( கீ பர்பார்மர்ஸ்)

* 2007ல் எம் எஸ் தோனி ஹேங்கில் ரோல் & பினிசர் – 2022ல் ஹர்திக் பாண்டியா ஹேங்கில் ரோல் & பினிசர்

image

2007 இந்தியா பாகிஸ்தான் முதல் போட்டி – 2022 இந்தியா பாகிஸ்தான முதல் போட்டி

* 36-4 என்ற இடத்தில் இருந்து 141 ரன்கள் எடுத்தது இந்தியா- 31-4 என்ற இடத்தில் இருந்து 160 ரன்கள் எடுத்தது இந்தியா

* 3ஆம் வீரராக உத்தப்பா அரைசதம்- 3ஆம் வீரராக விராட் கோலி அரைசதம்

* 6ஆம் வீரராக எம் எஸ் தோனி மேட்ச் வின்னிங் 33 ரன்கள் எடுத்தார்- 6ஆம் வீரராக ஹர்திக் பாண்டியா மேட்ச் வின்னிங் 40 ரன்கள் எடுத்தார்

image

* முதல் முறையாக பவுல்ட் அவுட் முறையில் வெற்றி முடிவு செய்யப்பட்டது சர்ச்சையாக முடிந்தது.

* நோ பாலிற்கு அடுத்த பந்து ஸ்டம்பில் பட்டு 3 ரன்கள் எடுத்தது சர்ச்சையாக முடிந்தது.

* இரண்டு போட்டிகளும் இறுதி பந்துவரை சென்றது.

* வெற்றி பெற வேண்டிய போட்டியை பாகிஸ்தான் இழந்தது

* இரண்டு போட்டியிலும் இந்திய அணிக்கே லக் இருந்தது.

image

2007ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது போன்றே இந்த இந்திய அணியும் உலகக் கோப்பையை வென்று வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

Pepsi Vijayan guarded Shivaji for many hours!.. Do you know what a man would do if he found him?..

Actor Thilakam Sivaji Ganesan has shown acting with his feelings and emotions as if acting is his breath...

வெற்றிகரமான சந்திர ஃப்ளைபைக்குப் பிறகு நாசாவின் பயோசென்டினல் மிஷன் நடந்து கொண்டிருக்கிறது

பயோசென்டினலின் விண்கலம் சந்திரனைக் கடந்தும் பறப்பது பற்றிய விளக்கம். கடன்: நாசா/டேனியல் ரட்டர்<span class="glossaryLink" aria-describedby="tt" data-cmtooltip="NASAEstablished in 1958, the National...

Ajith left for a foreign trip?.. The video of him holding hands at the airport went viral!..

Ajith, who is fondly known as the mass actor of Tamil cinema, Unnatha Naditar, has now completed the...

Solution of the Spanish Wordle of December 1, normal, tildes and scientific

Clues to solve today's Wordlde quickly. In case you need a little push with the Wordle from today...

I forgot to put a saree jacket…Kiran in Khilma costume (video)…

Actress Kiran is one of the hot girls who came from Mumbai to throw a hot party for...

வித்தியாசமான வாட்சீரியா “டி. ரெக்ஸ் ஆஃப் இட்ஸ் டைம்”

வாட்சீரியா ஒரு வரலாற்றுக்கு முந்தைய சூப்பர்பிரேடேட்டராக இருந்தார். சாலமண்டர் போன்ற உடல் மற்றும் நீண்ட, குறுகிய தலையுடன் ஆறு அடி நீளமுள்ள ஏரியில்...

Must read