இது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்! | Vishnu Vishal undergoes Cupping therapy

0
43
இது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்! | Vishnu Vishal undergoes Cupping therapy


நெருக்கமான போட்டோஸ்

நெருக்கமான போட்டோஸ்

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் காதல் உறவில் இருந்த விஷ்ணு விஷால், கடந்த ஏப்ரல் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வருகிறது.

கப்பிங் தெரபி

கப்பிங் தெரபி

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் கப்பிங் தெரப்பி மேற்கொள்ளும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் விஷ்ணு விஷால்.

கட்டுடலை காட்டும் போட்டோ

கட்டுடலை காட்டும் போட்டோ

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார் விஷ்ணு விஷால். தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் தனது கட்டுடலை காட்டும் போட்டோக்களையும் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க

ரத்த ஓட்டத்தை அதிகரிக்க

இந்நிலையில் சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபியை செய்துகொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் ரத்தம் ஓட்டம் அதிகரிக்க செய்யும் சீனாவின் பழமையான மருத்துவ முறையான கப்பிங் தெரபி வெளிநாடுகளில் மேற்கொள்ளப் படுகிறது.

புதிய அற்புதமான தெரபி

புதிய அற்புதமான தெரபி

கண்ணாடி கப்புகளை அழுத்தி வைத்து செய்யப்படும் இந்த கப்பிங் தெரபி கடினமாக இருந்தாலும் உடம்பிலுள்ள வலி அனைத்தும் நீக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும் என்று சொல்லப்படுகிறது. இதனை, மேற்கொண்டுள்ள விஷ்ணு விஷால், உடல் வலி மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த புதிய அற்புதமான தெரபிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here