இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்… இதோட விலை எவ்ளோ தெரியுமா?

0
40
இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்… இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் அதன் பிரபல இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2021 போனேவில்லே பாபர் பைக்கையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

பல கவரும் அம்சங்களை புதுப்பித்தல்களின் வாயிலாக இப்பைக் பெற்றிருக்கின்றது. எனவேதான் இதன் அறிமுகம் இந்திய சூப்பர் பைக் பிரியர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கின்றது. மிக குறிப்பாக இப்பைக்கில் உயர் தர தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அப்டேட்டின் அடிப்படையில் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுபோதாதென்று, 77 அக்ஸசெரீஸ்களையும் கூடுதல் அலங்காரப் பொருட்களாக இப்பைக்கிற்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அட்ஜெஸ்டபிள் இருக்கை, உயரமான லக்கேஜ் பார்கள், ஃபூட் பெக்குகள் என பல்வேறு கூறுகளை கூடுதல் அக்ஸசெரீஸாக வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இப்பைக்கில் யூரோ-5 தரத்திலான 1,200 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே ட்ரையம்ப் பயன்படுத்தியுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 106 என்எம் டார்க் மற்றும் 78 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. யூரோ5 என்பது பிஎஸ்6 தரத்திற்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

ஆகையால், முந்தைய மாடலை (வெர்ஷனை)க் காட்டிலும் புதிய அப்டேடட் டிரையம்ப் போனேவில் பாபர் சற்று கூடுதல் மைலேஜை வழங்கும் என கூறப்படுகின்றது. இப்பைக்கில் இடம் பெற்றிருக்கும் பெட்ரோல் டேங்கின் முழு கொள்ளளவு 12 லிட்டர் ஆகும். இதனை முழுமையாக நிரப்பினால் 33 சதவீதம் வரை கூடுதல் மைலேஜை பெற முடியும்.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

புதிய டிரையம்ப் போனேவில் பாபர் நான்கு விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மேட் ஸ்டார்ம் கிரே மேட் ஐயர்ன் ஸ்டோன், கிளாசிக் ஜெட் பிளாக் மற்றும் கோர்டோவன் சிவப்பு ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான பகுதி முழு முடக்க நிலையில் சிக்கி தவித்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பிரீமியம் இருசக்கர வாகன பிரியர்களை மையப்படுத்தி புதிய போனேவில் பாபர் மாடல் பைக்கை டிரையம்ப் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தி பணி நிறுத்தம், விற்பனை நிறுத்தம் என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்கும் தற்காலிக தடையை விதித்திருக்கின்றநிலையில், டிரையம்ப் துணிச்சலாக இவ்விலையுயர்ந்த பைக்க இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. புதிய 2021 டிரையம்ப் போனேவில்லே பாபர் பைக்கிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11.75 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here