இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி; முடிவை தீர்மானிக்கும் நாள்: வானிலை நிலவரம் என்ன? | India vs New Zealand, WTC Final, Southampton weather today: No rain on Day 6

0
5
இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி; முடிவை தீர்மானிக்கும் நாள்: வானிலை நிலவரம் என்ன? | India vs New Zealand, WTC Final, Southampton weather today: No rain on Day 6


இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி நாளான இன்று வானிலை அச்சம் தரும் வகையில் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டமான நேற்று நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என்கிற நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்தது.

களமும், சிறப்பான பந்துவீச்சும் நியூஸி. பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தியது. நிதானமாக ரன் சேர்ப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை ஷமியின் பந்துவீச்சு திணறடித்தது. உணவு இடைவேளைக்கு முன்பு ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்த நியூஸி. அணி 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

உணவு இடைவேளைக்குப் பின்பு சில ஓவர்கள் வில்லியம்ஸனும், க்ராண்ட் ஹோமும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். க்ராண்ட் ஹோம் 13 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கேன் வில்லியம்ஸன் அரை சதத்தை நெருங்க, இஷாந்த் சர்மா வீசிய பந்தில் 49 ரன்களுக்கு வில்லியம்ஸன் பெவிலியன் திரும்பினார்.

நீல் வேக்னர் ரன் ஏதும் சேர்க்காமல் அஸ்வினின் சுழலில் சிக்கினார். அதிரடியாக ஆட முற்பட்ட டிம் சவுத்தி 46 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் நியூஸிலாந்து அணி 249 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை விட 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. புஜாராவும், கோலியும் களத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே முதல் நாள் ஆட்டமும், நான்காம் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்ட நிலையில், போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் பொருட்டு மேலும் ஒரு நாளை ஐசிசி நீட்டித்துள்ளது. அந்த வகையில் ஆறாவது நாளான இன்று (புதன்கிழமை) மதியம் போட்டி தொடங்கவுள்ளது.

வானிலை நிலவரம்

போட்டியின் வெற்றி முடிவை வானிலை மீண்டும் பாதிக்குமா? என்ற அச்சம் கிரிக்கெட் ரசிகர்களிடம் நிலவிய நிலையில் சவுத்தாம்டன் வானிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த ஐந்து நாட்களைப் போல் வானிலை இருக்காது என்றும், கருமேகங்கள் விலகி நேரம் செல்லச்செல்ல வெயிலை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டி, வானிலையால் பாதிக்கப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here