இந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன? | why thalapathy66 hashtag in twitter

0
7
இந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66: பின்னணி என்ன? | why thalapathy66 hashtag in twitter


ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகும் #Thalapathy66 ஹேஷ்டேக்கிற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படமாகும். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய்யின் 66-வது படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை தில் ராஜு தயாரிக்க, வம்சி இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது எனவும் குறிப்பிட்டார்கள்.

இந்நிலையில், இன்று (ஜூலை 27) இயக்குநர் வம்சிக்கு பிறந்த நாள். ஆகையால் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதனிடையே, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் க்ரிஷும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வம்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ட்வீட்டில், “விஜய் அண்ணாவுடன் உங்களுடைய அடுத்த படத்துக்குக் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு விட்டார். இந்த ட்வீட் இணையத்தில் பெரும் வைரலானது. இதை வைத்து விஜய் ரசிகர்கள் #Thalapathy66 இயக்குநருக்கு வாழ்த்துகள் என்று ட்வீட் செய்யத் தொடங்கினார்கள்.

இதனால் இந்திய அளவில் #Thalapathy66 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகத் தொடங்கியது. தனது ட்வீட் பெரும் வைரலானதால், உடனடியாக நீக்கிவிட்டார் க்ரிஷ். ஆனாலும், பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து ஷேர் செய்து, வம்சிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

1627397377343

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here