இந்த பாப்புலர் சீரியல் மூலம் தான் ரீஎன்ட்ரியாகிறாரா குஷ்பு…என்ன ரோல் தெரியுமா ? | Kushboo’s re entry in tv serial…did you know which popular serial ?

0
45
இந்த பாப்புலர் சீரியல் மூலம் தான் ரீஎன்ட்ரியாகிறாரா குஷ்பு…என்ன ரோல் தெரியுமா ? | Kushboo’s re entry in tv serial…did you know which popular serial ?


bredcrumb

News

oi-Mohana Priya S

|

சென்னை : 1990 களில் சினிமாவில் டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர்களில் குஷ்புவும் ஒருவர். இந்தியாவிலேயே நடிகை ஒருவருக்கு முதன் முதலில் கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு தான். அந்த அளவிற்கு ரசிகர் கூட்டத்தையும், அவர்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தவர்.

பிறகு குணச்சித்திர வேடங்களில் நடத்து வந்த குஷ்பு, அவ்னி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து டிவி சீரியல்கள் பலவற்றை தயாரித்து வந்தார். சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான கல்கி, குங்குமம், மருமகள், லட்சுமி ஸ்டோர்ஸ், நந்தினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ஜாக்பாட் போன்ற கேம் ஷோக்களை தொகுத்து வழங்கிய குஷ்பு, ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார்.

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட அரண்மனை 3 படக்குழு… படம் எப்போ ரிலீஸ்?லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட அரண்மனை 3 படக்குழு… படம் எப்போ ரிலீஸ்?

அதன் பிறகு அரசியலில் பிஸியானார் குஷ்பு. சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த குஷ்பு, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக போட்டியிட்டார். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, ட்விட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல சமயங்களில் சூடாக பதிலக்க கூடியவர்.

அண்ணாத்த ஷுட்டிங்கில் பிஸி

அண்ணாத்த ஷுட்டிங்கில் பிஸி

தேர்தல் தோல்விக்கு பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார் குஷ்பு. தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து வருகிறார்.

 சின்னத்திரையில் ரீ என்ட்ரி

சின்னத்திரையில் ரீ என்ட்ரி

இதற்கிடையில் பிரபலமான சீரியல் ஒன்றின் மூலம் குஷ்பு, சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க போவதாக தகவல் பரவியது. புதிய சீரியல் ஒன்றை தானே தயாரித்து, நடிக்க குஷ்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதற்கு பிறகு, சன் டிவியில் சித்தி 2 சீரியலில் ராதிகா நடித்த ரோலில் குஷ்பு நடிக்க போவதாக ஒரு தகவல் பரவியது.

இந்த சீரியலில் குஷ்புவா

இந்த சீரியலில் குஷ்புவா

லேட்டஸ்ட் தகவலாக ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியல் மூலமாக தான் குஷ்பு ரீஎன்ட்ரி தர போகிறாராம். இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மாவாக, அரண்மனைக்கிளி படத்தில் நடித்த காயத்ரி நடித்து வருகிறார். இவரது ரோலில் தான் குஷ்பு நடிக்க போவதாக கூறப்படுகிறது.

என்ன ரோலில் நடிக்கிறார்

என்ன ரோலில் நடிக்கிறார்

கோகுலத்தில் சீதை சீரியல் ஷுட்டிங்கில் குஷ்பு பங்கேற்பது போன்ற ஃபோட்டோ வெளியாகி உள்ளதால், அவர் இந்த சீரியல் மூலம் தான் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. ஆனால் ஹீரோயினுக்கு அம்மாவா அல்லது புதிதாக ஒரு கேரக்டரா, கெஸ்ட் ரோலா என்பது தெரியவில்லை.

வில்லியாக நடிக்கும் நளினி

வில்லியாக நடிக்கும் நளினி

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியல், 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. தற்போது 300 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. காந்திமதி என்ற ரோலில் வில்லியாக நளினி நடித்து வருகிறார்.

English summary

Latest reports said that Kushboo to re entry in tv serials through Zee tamil’s popular serial Gokulathil seethai. But her role in this serial his not cleared.

Story first published: Sunday, July 25, 2021, 8:28 [IST]Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here