“இந்நாளை எப்போதும் மறக்கமாட்டேன்” – பாண்ட்யா பரிசளித்த பேட்; நெகிழ்ந்துபோன இலங்கை வீரர்

0
10
“இந்நாளை எப்போதும் மறக்கமாட்டேன்” – பாண்ட்யா பரிசளித்த பேட்; நெகிழ்ந்துபோன இலங்கை வீரர்


“இந்நாளை எப்போதும் மறக்கமாட்டேன்” – பாண்ட்யா பரிசளித்த பேட்; நெகிழ்ந்துபோன இலங்கை வீரர்

இலங்கை ஆல்ரவுண்டர் சமிகா கருணாரத்னேவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய பேட்டை பரிசாக அளித்தார்.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 38 ரன்களில் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இலங்கை ஆல்ரவுண்டரான சமிகா கருணாரத்னேவுக்கு தன்னுடைய பேட்டை பரிசாக வழங்கி இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.

image

இந்தத் தகவலை தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் கருணாரத்னே. மேலும் அந்தப் பதிவில் “என்னுடைய ரோல் மாடல் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து பேட்டை பெற்றது கெளரவமாக கருதுகிறேன். அதுவும் என்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் இது சாத்தியமாக இருக்கிறது. நீங்கள் ஒரு அருமையான மனிதர். உங்களின் இந்தப் பரிசால் நான் நெகிழ்ச்சியடைந்தேன். இந்நாளை எப்போதும் மறக்கமாட்டேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிர்வதிப்பார்” என்றார் சமிகா கருணாரத்னே.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

WDitQ cbzKUSource link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here