இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்… நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

0
53

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

கடந்த வியாழன் அன்று பராளுமன்றத்தில் உரையாற்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி, “இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 703 கிமீட்டருக்கு சாலை அமைத்திருப்பதாக” கூறினார். இது சமூக நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

இந்த உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் கழிவுகள் மாறியிருக்கின்றன. பல மெட்ரிக் டன்கள் அளவில் கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேர்ந்து வருகின்றன. இவை மலைபோல் குவிந்து வருகின்றன. இது உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஓர் நிலையாகும்.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இதனடிப்படையில், இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலையை அமைத்திருக்கின்றது.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

இத்துடன், இனி வரும் காலங்களில் புதுப்பிக்கப்படும் சாலைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது என அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கின்றார். இதுகுறித்த அறிவிப்பு எழுத்து பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

சாலை அமைப்பதற்கு பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது கட்டாயமாக்கியிருப்பதால் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிளாஸ்டிக் 6-8 என்ற சதவீதத்தில் சாலை போட பயன்படுத்தப்படுகின்றது. மீதம் 92-98 சதவீதம் என்ற அளவிலேயே பிடுமென் (bitumen) பயன்படுத்தப்படும்.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

2016ம் ஆண்டு அமைச்சர் நிதின் கட்காரி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகளை உருவாக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார். இதனடிப்படையில், இதுவரை 11 மாநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பிற பயன்பாட்டு பொருட்களை தயாரிக்கும் பணியிலும் ஒன்றிய அரசு களமிறங்கியிருக்கின்றது. ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அறிக்கையின்படி, இந்தியாவில் 3.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் 2018-19 ஆம் ஆண்டில் சேர்ந்ததாகவும், இது ஒரு நாளைக்கு சுமார் 9,200 டன் ஆகும்.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

இத்தகைய சூழ்நிலையிலேயே மலை போல் குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகலை மறு பயன்பாடு செய்யும் வகையில் பிளாஸ்டிக்கால் சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேலையில் நாள் ஒன்றிற்கு 36.5 கிமீ எனும் வீதத்தில் சாலைகள் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

இனி சாலைகளை புதுப்பிக்கும் கட்டாயம் இதை பயன்படுத்தனும்... நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அதிரடி!

மிகக் குறிப்பாக, உலக சாதனை படைக்கும் வகையில், 2.5 கிமீ நான்கு வழி சாலையை வெறும் 24 மணி நேரத்திலும், 26 கிமீ ஒற்றை வழி பாதையை வெறும் 21 மணி நேரத்திலும் உருவாக்கி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here