Homeதமிழ் Newsஆட்டோமொபைல்இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்கார்பியோ என் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. சந்தையில் பிரபலமான ஸ்கார்பியோ மாடலின் புதிய தலைமுறையாக கொண்டுவரப்பட்ட இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.99 லட்சத்தில் இருந்து ரூ.19.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இது மேனுவல் வேரியண்ட்களின் விலைகள் தானே தவிர்த்து, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கான விலைகள் ஜூலை 21இல் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து ஜூலை 30இல் இருந்து புதிய ஸ்கார்பியோ என் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட உள்ளன. இதற்கிடையில்தான், அறிவித்தப்படி புதிய ஸ்கார்பியோ என் காரின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக டெஸ்ட் ட்ரைவ் இந்தியாவின் முக்கிய 30 நகரங்களில் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இந்த முதல் 30 முக்கிய நகரங்களில் சென்னை, கோயம்புத்தூர், டெல்லி-என்சிஆர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், புனே, லக்னோ, சண்டிகர், ஜெய்பூர், கொல்கத்தா, லூதியானா, இந்தூர், ஜலாந்தர், கௌகாத்தி, புவனேஷ்வர், சூரத், ராஞ்சி, பாட்னா, வதோதாரா, ராய்பூர், கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர், போபால், டெக்ராடூன், அமிர்தசரஸ், ஜம்மூ & கான்பூர் உள்ளிட்டவை அடங்குகின்றன. மற்ற நகரங்களில் ஜூலை 15இல் இருந்து துவங்கப்படும் என ஏற்கனவே மஹிந்திரா தெரிவித்திருந்தது.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

மேலும், அறிவிக்கப்பட்டதுபோல் ‘ஆட் டூ கார்ட்’ (Add To Cart) வசதியும் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, முன்பதிவு இன்னும் துவங்கப்படாவிடினும் மஹிந்திராவின் இணைய பக்கத்தில் விருப்பப்படுவோர் தங்களுக்கு விருப்பமான/ஏற்ற ஸ்கார்பியோ என் காரின் வேரியண்ட், என்ஜின் தேர்வு, டிரான்ஸ்மிஷன் மற்றும் நிறத்தேர்வை தேர்வு செய்து ‘Cart’ பக்கத்தில் சேமித்து வைத்து கொள்ள முடியும்.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

பிறகு, முன்பதிவுகள் துவங்கப்பட்ட பின் தேர்வு செய்த தேர்வுகளின்படி ஸ்கார்பியோ என் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வழக்கமாக நாம் அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட செயலிகளில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது போன்றதே. ஆட் டூ கார்ட் வசதி தொடர்பாக மஹிந்திராவின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை கீழே காணலாம்.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

ஜூலை 30ஆம் தேதி துவங்கும் முன்பதிவுகளில், விபரங்களை அடுத்த 2 வாரங்களுக்கு, அதாவது ஆகஸ்ட்15ஆம் தேதி வரையில் மாற்றியமைத்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. ஸ்கார்பியோ என் மேனுவல் கார்களுக்கான விலைகளாக மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை முதல் 25,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே செல்லப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிறிய இடைவெளியுடன் இந்த விலைகளை மஹிந்திரா அதிகரிக்கலாம்.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

புதிய ஸ்கார்பியோ என் காருக்கான டெலிவிரிகள் வரும் தீபாவளி பண்டிகை காலத்தின்போதுதான் துவங்கப்படும் என தெரிகிறது. எக்ஸ்யூவி700 மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா பிராண்டின் புதிய லோகோ ஸ்கார்பியோ என் மாடலிலும் தொடரப்பட்டுள்ளது. லோகோ மட்டுமின்றி எக்ஸ்யூவி700 காரில் வழங்கிய அதே என்ஜின் தேர்வுகளை தான் ஸ்கார்பியோ என் காரிலும் மஹிந்திரா தொடர்ந்துள்ளது.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இந்த வகையில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் தேர்வு ஸ்கார்பியோவின் புதிய தலைமுறையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

இவற்றுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு டார்க்-கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட உள்ளன. இவற்றுடன் மஹிந்திராவின் புதிய 4 எக்ஸ்ப்ளோர் 4-சக்கர-ட்ரைவ் அமைப்பும் ஸ்கார்பியோ என் காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த 4-சக்கர-ட்ரைவ் அமைப்பானது காரின் டீசல் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இனி நீங்களும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரை ஓட்டி பார்க்கலாம்!! டெஸ்ட் ட்ரைவ் ஸ்டார்ட்

புதிய ஸ்கார்பியோ என் மாடலுடன், விற்பனையில் இருக்கும் தற்போதைய தலைமுறை ஸ்கார்பியோவையும் ஸ்கார்பியோ கிளாசிக் என்கிற பெயரில் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக 7 மற்றும் 5 இருக்கை தேர்வுகளில் ஸ்கார்பியோ கார்களை இந்த நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியும். மேலும், விற்பனை போட்டியும் ஹூண்டாய் க்ரெட்டா/அல்கஸார், டாடா ஹெரியர்/சஃபாரி என்ற ஜோடி மாடல்களில் இருந்து வரும்.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read