இலங்கை சுற்றுப் பயணம்: ஜூன் 14 முதல் தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்திய அணி | India to start quarantine in Mumbai from June 14 for Sri Lanka series | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

0
16

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி ஜூன் 14 ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறது.

இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூலை 13 முதல் 25 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத்தொடரில் விளையாடப்போகும் வீரரகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரோகித் ஷர்மாவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

image

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கின்றனர். இந்திய அணியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கும் காலங்களில் அவர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்பு மும்பையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இந்திய அணியினர் அங்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்பு பயிற்சிகளை தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 12 ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தொடரில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here