உலகத்தில் முக்கால்வாசி நபர்கள் நல்லவர்கள்தான்.. ஆனால்.. மாயநதி சொல்ல வந்த கதை! | Maayanadhi A Family entertainment movie released today

0
42
உலகத்தில் முக்கால்வாசி நபர்கள் நல்லவர்கள்தான்.. ஆனால்.. மாயநதி சொல்ல வந்த கதை! | Maayanadhi A Family entertainment movie released today


bredcrumb

Reviews

oi-Vinoth R

|

நடிகர்கள்:அபி சரவணன்,வெண்பா,நரேன்,அப்புக்குட்டி

இசை: ராஜ பவதாரணி

இயக்கம்: அசோக் தியாகராஜன்

சென்னை : அறிமுக இயக்குனரான அசோக் தியாகராஜன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் தான் மாயநதி .இந்த படத்தில் அபிசரவணன் ,வெண்பா,அப்புக்குட்டி ,ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .

அப்பா மகள் பாசம் அம்மா இல்லாத மகளை அன்போடு வளர்க்கிறார் அப்பா நரேன்.தமிழ் கலாச்சாரம் மிக்க தமிழ் பெண்ணாக வருகிறார் வெண்பா.ஒரு அழகான ஹீரோயின் தமிழ் சினிமாவிற்கு இந்தப் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். நிறைய படங்கள் இதற்கு முன் செய்து இருந்தாலும் இந்த படம் வெண்பாவிற்கு ஸ்பெஷல் .

உலகத்தில் முக்கால்வாசி நபர்கள் நல்லவர்கள்தான்.. ஆனால்.. மாயநதி சொல்ல வந்த கதை! | Maayanadhi A Family entertainment movie released today

பள்ளி மாணவி தனது பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்னை எடுக்கிறாள்.

அவளை பள்ளி ஆசிரியர்கள் உடன் இருப்பவர்கள் என அனைவரும் கொண்டாடுகிறார்கள் .வெண்பா பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார் .வெண்பாவின் அப்பாவாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார் .

படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுபவராக வருகிறார் அபி சரவணன்.ஒரு நாள் ஆட்டோ ஓட்டுனருக்கு அடிபடுகிறது

அதற்கு மாற்றாக அபி சரவணன் செல்கிறார் வெண்பாவை சந்திக்கிறார்.சந்தித்தபிறகு காதல் ஏற்படுகிறது.இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதை இயக்குனர் நமக்கு விறுவிறுப்பாக வழங்கி உள்ளார்.

Maayanadhi A Family entertainment movie released today

மற்ற அப்பாகளை போல இல்லாமல் வாழ்வை எதார்த்தமாக புரிந்து அதில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என ஒரு தோழன் போல அறிவுரை கூறும் அப்பாவாகவே நரேன் நடித்திருக்கிறார். பல இடங்களில் குட்டி குட்டி கதை சொல்லி மகளை மோட்டிவேட் செய்கிறார் .

Maayanadhi A Family entertainment movie released today

பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்று விட்டார் மகள் வெண்பா . இதே போல பணிரெண்டாம் வகுப்பிலும் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் சூழ்நிலையும் கதாநாயகிக்கு ஏற்படுகிறது .அவரின் அப்பா தெளிவான கருத்துக்களை அவளுடன் பகிர்கிறார் .இருந்தும் அவள் படித்து கொண்டிருக்கும் போது காதல் என அவள் பின்னால் சுற்றும் வாலிபன்,படிப்பு தான் முக்கியம் என வெண்பா விலகி போக அவன் அவளை தொந்தரவு செய்கிறான் .இதே நேரத்தில் ஆட்டோ ஓட்டுனர் அபிசரவணனும் வெண்பாவை ஒரு தலையாக காதலிக்கிறார் மற்றும் வெண்பாவுக்கும் அபிசரவணன் மேல் ஒரு பிரியம் ஏற்படுகிறது .

இதனிடையில் வெண்பாவை துரத்தி துரத்தி காதலித்தவன் கோபம் கொண்டு வெண்பா மேல் ஆசிட் வீச முயல்கிறான் .இந்த நிகழ்வை ஆட்டோ ஓட்டுனர் அபிசரவணன் தடுக்கிறான் .இதன் பின் வெண்பா தனது சரியான மனநிலையில் பள்ளி தேர்வு எழுதி தனது அப்பா சொல்படி வெற்றி பெற்றாளா..? அதே நேரத்தில் தனது காதலை அபிசரவணனிடம் வெளிபடுத்தினாளா..? அல்லது அபிசரவணன் வெண்பா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினாரா..? என்பது தான் மாயநதி படத்தின் மீதி கதை.

Maayanadhi A Family entertainment movie released today

படத்தில் நரேன் வெண்பாவிற்கு கூறும் குட்டி குட்டி கதைகள்.பல பெண்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தான்.படத்தில் எங்கும் ஒரு காட்சியில் கூட நெகடிவிட்டி அதிகம் இல்லை அது தான் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். சில கதாபாத்திரங்களின் முடிவுகள் நெகடிவாக இருந்தும் , அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு பொருந்தும்

Maayanadhi A Family entertainment movie released today

13 முதல் 24 வயது வரை உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் செய்யும் தவறே இந்த மாயநதி.இது ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஒரு வித்தியாசமான திரைப்படம். மாயநதி நம் எண்ணங்களின் ஓட்டமே . அதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் மாயவரத்தை சேர்ந்த இயக்குனர்.

national award கிடைச்சதால தான் சில நல்ல படங்கள்-ல வாய்ப்பு கிடைக்கிது

படத்தின் நிறைகள் என்று சொன்னால் படத்தில் எடுக்க பட்ட கதை களம் ,நடிகர்கள் தேர்வு மற்றும் ஒளிப்பதிவு பல இடங்களில் மிக சரியாக இருக்கிறது .முக்கியமாக கடைசி 20 நிமிடங்கள் படத்தின் ஓட்டம் மிக சுறுசுறுப்பாய் இருக்கிறது .கடைசி காட்சிகளில் கதை கொண்டு வந்து முடிக்கபட்ட விதம் அது மிக அழகாக சொல்லபட்ட விதம் என இறுதி 20 நிமிடங்களில் சிக்ஸர் அடித்து இருக்கிறார் அசோக் தியாகராஜன் .

படத்தின் குறை என்றால் எதிர்பார்க்கபடுகிற திரைக்கதை அப்படியே நடப்பது தான் ,திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்று கருதபடுகிறது .படத்தின் பின்னணி இசையை தவிர்த்து பாடல்கள் எந்த விதத்திலும் படத்திற்கு கைகொடுக்க வில்லை .மேலும் நரேன் கதாபாத்திரம் பல இடங்களில் அப்பா பட சமுத்திரகனியை ஞாபகபடுத்துகிறது .

படத்திற்கு கூடுதல் பலம் ராஜ பவதாரணியின் இசை. ஒரு இசை குடும்பத்தில் இருந்து வந்து, பல பாடல்கள் பாடி பல படங்களுக்கு இசை அமைத்துள்ளர்.ஆனால் இப்படம் அவருக்கு ஒரு ஸ்பெஷல்.

இதில் யுகபாரதி வரிகளில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.மற்றும் பின்னணி இசை படத்தில் வரும் காட்சிகளுக்கு கரெக்டாக பொருந்தி உள்ளது.சில இடங்களில் ஏன் பவ தாரணி இப்படி ஒரு

பி ஜீ எம் கொடுத்தார் என்று கொஞ்சம் தட்டுகிறது . இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்

மொத்தத்தில் படம் எவ்வாறு இருக்கிறது என்றால் பள்ளி படிப்பின் போது நிலை தடுமாறும் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் குறைகள் சில இருந்தும் சொல்லபட்ட கருத்து கடினமான இருக்கிறது.முக்கியமாக கடைசி 20 நிமிடங்கள் படத்தை காப்பாற்றி விட்டது என்றே சொல்லலாம் .

Maayanadhi A Family entertainment movie released today

இயக்குனர் தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த ஒரு முக்கியமான பெண்ணுடைய சொந்த கதையை தான் படம் ஆகியிருக்கிறார் . பல உண்மை சம்பவங்களை ஒன்று திரட்டி ஒரு பீல் குட் திரைக்கதை செய்து உள்ளார் .

அவர் எடுத்த இந்த முதல் முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் போடலாம் .

மாயநதி வசூலிலும் மாயங்கள் செய்ய வேண்டும் . வெற்றி பெற வேண்டும்

மாயநதி மனசை மயக்கும் நதிSource link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here