Thursday, September 29, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

உழைப்பாளர்கள் தினத்தில் உதித்த நாயகன்.. அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா? | Ajith Kumar’s total net worth details are here; Happy Birthday AK!


அஜித் பிறந்தநாள்

அஜித் பிறந்தநாள்

1971ம் ஆண்டு மே 1ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் (தெலங்கானா) உள்ள செகந்தராபாத்தில் பிறந்தார் அஜித்குமார் சுப்பிரமணியம். அப்பா சுப்பிரமணியம் கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர். அம்மா மோகினி கொல்கத்தாவின் சிந்தியை சேர்ந்தவர். வலிமை படத்தில் வருவது போலவே அஜித் குமாருக்கு அனுப் குமார் என ஒரு அண்ணனும், அனில் குமார் என ஒரு தம்பியும் உள்ளனர்.

51வது பிறந்தநாள்

51வது பிறந்தநாள்

தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் இன்று நடிகர் அஜித்தின் 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் பள்ளி செல்லும் மாணவனாக சின்ன ரோலில் நடித்த அஜித், 1993ம் ஆண்டு வெளியான அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். 1996ம் ஆண்டு வெளியான காதல் கோட்டை படம் தான் அஜித்துக்கு மிகப்பெரிய முதல் வெற்றியை பரிசளித்தது.

60 படங்கள்

60 படங்கள்

அமராவதி முதல் வலிமை வரை மொத்தம் 60 படங்களில் அஜித் நடித்துள்ளார். அடுத்ததாக ஏகே 61 மற்றும் 62 படங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், என்னை அறிந்தால், வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.

105 கோடி சம்பளம்

105 கோடி சம்பளம்

ஆரம்பத்தில் ஒரு கோடி வாங்குவதே தமிழ் சினிமா நடிகர்களுக்கு பெரிய தொகையாக இருந்தது. ஆனால், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தற்போது 100 கோடிக்கும் அதிகமாக ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்திற்கு அவருக்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் அஜித்.

சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

நடிகர் அஜித் ஒரு தீவிர ரேஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அஜித்திடம் உலகின் மிக விலை உயர்ந்த பைக்குகளும், கார்களும் உள்ளன. ரூ. 4.80 கோடி மதிப்பில் Ferrari 458 Italia கார் வைத்துள்ளார். BMW 740 Li – ரூ. 87 லட்சம், Honda Accord V6 – ரூ. 30 லட்சம், BMW S1000RR, ரூ. 24 லட்சம், Aprilia Caponord 1200 – ரூ. 20.25 லட்சம், BMW K1300 S – ரூ. 21.8 லட்சம், Kawasaki Ninja ZX 14R – ரூ. 19 லட்சம் என கூறப்படுகிறது. இப்படி காஸ்ட்லியான கார்களையும் பைக்குகளையும் வைத்திருக்கிறார் நடிகர் அஜித்.

375 கோடி சொத்து

375 கோடி சொத்து

இதுவரை 60 படங்கள் நடித்துள்ள நடிகர் அஜித்திடம் 375 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் படத்தின் சம்பளமும் சேர்ந்து வந்தால் 450 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார் அஜித் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவை தாண்டி சில பிசினஸ்களையும் அஜித் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Source link

Today's Feeds

இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல் நினைவலைகள்! | Ilayaraja Isai Iravu : Aarum athu Aazhamilla song

இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல்...

0
அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்திருந்தாலும், மேற்கூரையின் வழியே சொட்டும் மழைத்துளியும், மரத்தின் இலைகள் உதிர்க்கும் தூறலும், கொசுறு...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading