Homeசினிமா செய்திகள்எத்தனை பேர் தூற்றினாலும் 'பூமி' தான் நம்பர் ஒன்.. இளம் விமர்சகர் அஷ்வின் அதிரடி! |...

எத்தனை பேர் தூற்றினாலும் ‘பூமி’ தான் நம்பர் ஒன்.. இளம் விமர்சகர் அஷ்வின் அதிரடி! | Young youtuber Ashwin’s review Bhoomi Movie


ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

அஷ்வின் தன்னுடைய வீடியோவில் கூறியிருப்பதாவது, ஜெயம் ரவி ஒவ்வொரு படத்தின் கதையை தேர்வு செய்யும் விதமே வித்தியாசமாக உள்ளது. தனி ஒருவன், போகன், மிருதன், டிக் டிக் டிக் என எல்லா படங்களுமே வித்தியாசமாக உள்ளது. ஜெயம் ரவி – இயக்குநர் லக்ஷ்மண் கூட்டணிக்கு கிடைத்த ஹாட்ரிக் ஹிட் பூமி திரைப்படம்.

விவசாயிகளை பற்றி

விவசாயிகளை பற்றி

இயக்குநர் லக்ஷ்மண் ஜெயம் ரவியுடன் இணைந்து முதல் படமாக ரோமியோ ஜூலியட் இரண்டாவது படமாக போகன் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வித்தியாசமாக இருந்தது. இந்தப் படத்தில் விவசாயிகளை பற்றி பேசியிருக்கிறார்கள்.

சிறப்பாக கொண்டு செல்லலாம்..

சிறப்பாக கொண்டு செல்லலாம்..

விவசாயிகளை பற்றி கொஞ்சமாவது நினைக்கணும் என்று தோன்ற வைத்துள்ளார். விவசாயிகள் பற்றி ஆழமாக சொல்லியிருக்கிறார்கள். விவசாயம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? இன்ஜினியரிங் முடித்தவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்தால் விவசாயத்தை இன்னும் சிறப்பாக கொண்டு செல்லலாம் என ஒரு வசனத்தில் பேசியுள்ளார்.

 வில்லனை அழைக்கும் விதம்

வில்லனை அழைக்கும் விதம்

சில விஷயங்களை நேரடியாக சொல்லியிருக்கிறார்கள். சில விஷயங்களை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன விதம் நல்லா இருக்கு. அவர் பேசும் பஞ்ச் டயலாக்ஸ் சூப்பர். துரை.. என்று வில்லனை அவர் அழைக்கும் விதம் செம… ஒரு கார்ப்ரேட் வில்லன்.. வழக்கமாக எல்லா படத்திலும் பார்க்கும் ஒன்றுதான். ஆனால் ஜெயம் ரவியின் ஃபார்மட்டில் பார்க்கும் போது கொஞ்சம் புதுசாக உள்ளது.

டிவிஸ்ட்டுக்கு பிறகு..

டிவிஸ்ட்டுக்கு பிறகு..

எந்த காட்சியுமே தேவையில்லாதது என்று சொல்ல முடியாது. கதைக்கு தேவையானதாக தான் இருக்கிறது. ஒரு 10 நிமிடம் வழக்கமான படத்தை போன்றுதான் இருக்கிறது. ஆனால் ஒரு டிவிஸ்ட்டுக்கு பிறகுதான் படம் வேற லெவலில் இருக்கிறது. தம்பி ராமையாவின் ஆக்ட்டிங் சூப்பர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

ஒரு மூலக்கதை.. வேலுச்சாமி என்ற கேரக்டரில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவர்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட். படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சைன்ட்டிஸ்ட்.. செவ்வாய் கிரகத்தில் இருக்கிறார். பூமி போன்றே இருக்கும் அந்த கிரகத்தில் ஆய்வு செய்கிறார். அவருடைய கண்டுபிடிப்பு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது.

மக்கள் படும் கஷ்டம்..

மக்கள் படும் கஷ்டம்..

அப்போது கிடைக்கும் ஒரு கேப்பில்.. தன்னுடைய சொந்த ஊரான கிராமத்திற்கு செல்கிறார். கடைக்கோடி கிராமத்தில் இருந்து படித்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார். அங்கு போகும் போது தனது நண்பர்களான சதீஷ், தம்பி ராமையா அவர்களை பார்க்கும் போது அந்த மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கிறார். அவர்களோடு சேர்ந்து இவரும் போராடுகிறார். இதில் அவர் வெற்றி பெறுகிறாரா என்பதுதான் படத்தின் ஒன் லைன்.

தமிழன் என்று சொல்லடா..

தமிழன் என்று சொல்லடா..

இதை அவர்கள் சொன்ன விதம் தான் அழகு. ஒவ்வொரு கேரக்டருமே நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது. ராதா ரவி எப்போதும் போல இதிலும் கலக்கியிருக்கிறார். சதீஷ் அவருடைய பெஸ்ட்டை அவர் கொடுத்துள்ளார். இமானின் இசை செம.. அதிலும் தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாடல் கேட்கும் போதே தமிழன் என்ற உணர்வை ஊட்டுகிறது.

மதன் கார்க்கி வரிகள்

மதன் கார்க்கி வரிகள்

அந்த பாடலில் மதன் கார்க்கி பாடல் வரிகளும் செம.. ஜெயம் ரவிக்கு என அவர் எழுதும் பாடல்கள் அனைத்துமே பெஸ்ட்டாகதான் இருந்துள்ளது. ஜெயம் ரவிக்கு தமிழன் என்று சொல்லடா பாடலையும் அனிருத்துதான் பாடியிருக்கிறார். இந்தப் படத்தில் எல்லாருமே தங்களின் பெஸ்ட்டை கொடுத்துள்ளனர்.

 சோஷியல் மெசேஜ்

சோஷியல் மெசேஜ்

25வது படம் என்றால் ஒரு கமர்ஷியலாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஜெயம் ரவி ஒரு சோஷியல் மெஸேஜ் சொல்லும் படத்தை கொடுத்திருக்கிறார். பேராண்மை, நிமிர்ந்து நில், கோமாளி போல் இதில் சோஷியல் மெசேஜை கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் ஜெயம் ரவி.

என்னென்ன டெவலப்மென்ட்..

என்னென்ன டெவலப்மென்ட்..

இதில் ஸ்பேஸ், விவசாயம், கார்ப்ரேட் என மூன்றையுமே கவர் பண்ணியிருக்கிறார்கள். ஸ்பேஸ்ல என்னென்ன டெவலப்மென்ட் நடக்குது என்பதை சொல்லியிருக்கிறார்கள், விவசாயத்தில் என்னென்ன அநீதி நடக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார்கள். அதே போல் கார்ப்ரேட் எப்படி தமிழகத்தை ஆக்கிரமிச்சிருக்காங்க என்று சொல்லியிருக்கிறார்கள்.

பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார்..

பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார்..

ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு படத்தை எடுத்துவிட்டு பிறகு போகன் போன்ற ஒரு படத்தை எடுக்க தைரியம் வேண்டும். போகன் போன்ற ஒர படத்தை எடுத்துவிட்டு இப்படி ஒரு படத்தை எடுக்க தைரியம் வேண்டும். லக்ஷ்மண் சார் அவருடைய பெஸ்ட்டை செய்திருக்கிறார்.. இவ்வாறு அஷ்வின் தனது விமர்சன வீடியோவில் கூறியுள்ளார்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read