என்னது நாளை முதல் ட்விட்டர் இயங்காதா? ட்வீட் போட்ட ஆத்மிகா.. நம்பர் கேட்கும் நெட்டிசன்கள்! | Aathmika’s epic reaction and netizens troll over Twitter Ban in India!

0
15
என்னது நாளை முதல் ட்விட்டர் இயங்காதா? ட்வீட் போட்ட ஆத்மிகா.. நம்பர் கேட்கும் நெட்டிசன்கள்! | Aathmika’s epic reaction and netizens troll over Twitter Ban in India!


ட்விட்டருக்கு தடை

ட்விட்டருக்கு தடை

சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரவுவதாகவும், இதனால், ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாகவும் கூறி இந்தியாவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நாளை மே 26 முதல் செயல்படாது என தகவல்கள் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

எல்லாத்துக்கும் வேட்டு

எல்லாத்துக்கும் வேட்டு

முன்னதாக டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட ஏகப்பட்ட செயலிகளை மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் பொது மக்களை மட்டுமின்றி பிரபலங்களையும் கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது.

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

#IStandWithTwitterIndia என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து நாடு முழுவதும் இந்தியர்கள் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் எண்ணத்தை கை விட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ட்விட்டரில் தான் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்து வைக்க முடிகிறது. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கும் ட்விட்டர் மூலம் தீர்வு கிடைத்துள்ளது என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொரோனா உதவி

கொரோனா உதவி

அரசு செய்யாத கொரோனா உதவிகளை கூட ட்விட்டரில் ஆள் தெரியாத நபர்கள் சில நிமிடங்களில் செய்ய இது போன்ற சமூக வலைதளங்கள் பேருதவியாக உள்ளன என்றும். முதலில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள், பின்னர் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குங்கள் என்றும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆத்மிகா அதிர்ச்சி

ஆத்மிகா அதிர்ச்சி

மீசையை முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆத்மிகா, “நாளை முதல் ட்விட்டருக்கு தடையா?” என ஜிஃப் இமேஜ் ஒன்றை பதிவிட்டு போட்டுள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கலாய்த்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

நம்பர் கொடுங்க

நம்பர் கொடுங்க

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஆத்மிகா போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், இனிமேல் உங்களுடன் எப்படி தொடர்பில் இருப்பது, உங்களோட வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க என கமெண்ட்டுகள் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் தடை செய்யப்படுவதாக பரவும் தகவல்களுக்கு மேலும், பல பிரபலங்களும் ரியாக்ட் செய்து வருகின்றனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here