Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்“என்னிடம் அத்துமீறினார்” - பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த இந்திய சைக்கிள் வீராங்கனை |...

“என்னிடம் அத்துமீறினார்” – பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த இந்திய சைக்கிள் வீராங்கனை | indian cyclist alleges sexual harassment of coach to be probe by panel


இந்திய சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், இந்திய பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தினால் ஸ்லோவேனியா (Slovenia) சென்றுள்ள இந்திய அணியை நாடு திரும்ப இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய அணியின் மூத்த சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், அணியின் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். “பயிற்சியாளர் என்னை அவருடன் ஒரே அறையில் தங்குமாறு வற்புறுத்தினார். அவரது மனைவியை போல நான் நடந்து கொள்ளுமாறு சொன்னார்” என புகாரில் தெரிவித்துள்ளார் அந்த வீராங்கனை.

இந்தப் புகாரை அவர் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இரண்டு குழுக்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஒன்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் குழு, மற்றொன்று இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் விசாரணை குழு.

5 வீரர்கள் மற்றும் ஒரே ஒரு வீராங்கனை அடங்கிய இந்திய சைக்கிளிங் அணி ஸ்லோவேனியாவிற்கு சென்றிருந்தது. வரும் 14-ஆம் தேதி வரையில் பயிற்சி மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பயணத்தில் பெண் பயிற்சியாளர் யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான் பாலியல் புகாரை அளித்துள்ளார் அந்த வீராங்கனை.

“வீராங்கனையின் புகாரை பெற்றதை தொடர்ந்து முதலில் அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரை இந்தியாவிற்கு திரும்ப செய்துள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்துள்ளோம். இதுகுறித்து விரைவாக விசாரித்து சிக்கலுக்கு தீர்வு காண உள்ளோம்” என தெரிவித்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம்.

இந்தச் சம்பவம் மே 29-ஆம் தேதியன்று நடைபெற்றதாக அந்த வீராங்கனை தெரிவித்துள்ளார். ஜூன் 3-ஆம் தேதி அன்று அவர் நாடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

இந்த 5 உணவுகள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்னு ஆய்வுகள் நிரூபிச்சிருக்காம்… மறக்காம சாப்பிடுங்க…! | Foods That Research...

<!----> அன்னாசி பெரும்பாலான பழங்களில் பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, ஆனால் இந்த வெப்பமண்டல இனிப்பு மற்றும் சிட்ரஸ் பழம் சிறுநீரக நோயாளிகளுக்கு உண்மையில் மிகவும் நன்மை வாய்ந்தது. இதற்கு காரணம் அதன் குறைவான பொட்டாசியமாகும், இது சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படும் போது பாதுகாப்பான விருப்பமாக உள்ளது. உணவில் ஒரு சிறிய பகுதியை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செல் மீளுருவாக்கம் செய்யவும் உதவும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற இயற்கை நொதி உள்ளது, இது உடலில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, அன்னாசி நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. <!----> குடை மிளகாய் மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது இந்த வண்ணமயமான மிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. கூடுதலாக குடைமிளகாயில் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை மாற்ற உதவுகிறது. கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, இந்த வண்ணமயமான மிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. <!---->...