Saturday, December 4, 2021
Homeசினிமா செய்திகள்என் பசங்க கூட இந்த இன்ஸ்டிடியூட்ல படிக்க முடியாது. ஆனா..... வெற்றிமாறனின் இலவச சினிமா பயிற்சி...

என் பசங்க கூட இந்த இன்ஸ்டிடியூட்ல படிக்க முடியாது. ஆனா….. வெற்றிமாறனின் இலவச சினிமா பயிற்சி | Even My son not get chance in my film institute says vetrimaran


40 சீட்டுக்கு 1000 போட்டி

40 சீட்டுக்கு 1000 போட்டி

கேள்வி : IIFC சினிமா கல்வி திடீர் திட்டமா?

பதில் : இந்த சினிமா பயிற்சி கல்வி, ஏற்கனவே பேசப்பட்டு, செயலாக்கத்துக்கு வரும் சமயத்துல, லாக்டவுன் காரணமா தள்ளி போயிடுச்சு. IIFC – திரை பண்பாடு ஆய்வகத்தோட,முதல் நேர்முகத்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்துகிட்டு இருக்கு. தமிழகம் முழுவதும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, முதல் பட்டதாரி மாணவர்களா பார்த்து செலக்ட் பண்ணி, அவர்களுக்கு தேர்வு நடக்குது. 1400 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு, 1100 மாணவர்கள் எக்ஸாம் எழுதிட்டு இருக்காங்க. சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி .போன்ற இடங்கள்ல நேர்முகத்தேர்வு நடந்துட்டு இருக்கு. இதுல 40 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். வரும் ஜனவரில இருந்து வகுப்புகள் ஆரம்பிக்கும்.

இனி அடுத்த தலைமுறை

இனி அடுத்த தலைமுறை

கேள்வி : இந்த IIFC-ன் நோக்கம் என்ன ?

பதில் : எல்லாருடைய கதையையும், அவரவர்கள் சினிமாவில் சொல்வதற்கான ஒரு வழிமுறைதான் இது. எல்லாருக்கும் இந்த கல்வி கிடைக்கனும். இந்த சமூகத்துக்குள்ள இன்றைய சூழலில், இந்த ஊடகங்களை கையாளும் விதமா எல்லா திறமைகளும் இதில் வளர்க்கப்படுது. சினிமாவுல ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டராவோ, இயக்குனராவோ, ஒளிப்பதிவாளராகவோ, யூட்யூபர் இப்படி நிறைய விதமான உருவாக்கப்படுகின்ற கல்விதான் இதோட நோக்கம். ஸ்டூடன்ஸ் எக்ஸாம் எழுதறத பார்த்தேன். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இவ்வளவு இளைஞர்கள் அவங்களோட எதிர்காலத்த நம்ம கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. அந்த பொறுப்பும் எங்களுக்கு இருக்கு.

இதையும் தெரிஞ்சிக்கலாம்

இதையும் தெரிஞ்சிக்கலாம்

கேள்வி : சினிமாவைத்தாண்டி வேறென்ன இருக்கு?

பதில் : இதுல சினிமா டெக்னிக்ஸ் மட்டும் சொல்லித்தர்ற குடுக்குற கல்வி மட்டும் கிடையாது. பொலிடிகல் சயின்ஸ், philosophy, சைக்காலஜி, சங்க இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர்கள் வரலாறு, தமிழ் நாடு வரலாறுன்னு எல்லாமே இதுல சொல்லிக்கொடுக்கப்படுது. சினிமாவை தெளிவாக பார்க்க கூடிய அரசியல் பார்வையை இது குடுக்குற முயற்சிதான் இது.

இதான் கொஸ்டின் பேப்பர்

இதான் கொஸ்டின் பேப்பர்

கேள்வி : எப்படி பட்ட கேள்வி இருக்கும்

பதில் : முதல் இரண்டு பார்ட் அவர்களோட கல்வி சார்ந்தும். அடுத்த பிரிவு க்ரியேட்டிவ் மற்றும் அவங்களுக்கு என்ன தெரியும், எந்த இடத்துல இருக்காங்க, என்ன புரிதல் ல இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க கூடிய பகுதியா இருக்கும்.

கேள்வி : கோட்டா அடிப்படையில் எதாவது ஒதுக்கப்பட்டுள்ளதா?

பதில் : இதுல முதல் முக்கியமான விஷயமே, அவங்க ஜெனரேஷன் ல முதல் பட்டதாரியா இருக்கனும். இதுல நான் நெனச்சா கூட என் பசங்கள படிக்க வைக்க முடியாது. முதல் விஷயம் இதுதான். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்-க்கு தான் இங்க முதலிடம்.அவங்கதான் பங்கு பெற முடியும்.

எங்கெல்லாம் காலேஜ் ?

எங்கெல்லாம் காலேஜ் ?

கேள்வி : தமிழகம் முழுவதும் எக்ஸாம் நடக்குது? தமிழகம் முழுவதும் காலேஜ் இருக்கா?

பதில் : இப்போதைக்கு தமிழகத்துக்கு ஒரு காலேஜ் தான் வச்சி ரன் பண்ண முடியும். தற்போதைய நிலவரப்படி அதுதான் ப்ளான். ஒரு வருஷ கோர்ஸ் இது. இங்க படிக்கிற மாணவர்கள் என்னவிட பெட்டரா, சூப்பரா இருக்க, நல்ல டைரக்டர்ஸ் கிட்ட வேலை செய்யனும். நல்ல சினிமா எடுக்க முயற்சிக்கனும். இததான் நான் விரும்பறேன் , என்று எந்த வித தலைக்கணமும் சுய நலமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நம்மோடு பேசினார் இயக்குனர் வெற்றிமாறன். டிஜிடல் மீடியா, இனி புதிய கோணத்தில் கிடைக்கப்பெறும். அது எல்லா சமூகத்தினராலும் திறமையுள்ளவர்களாலும் கொடுக்க முடியும் என்பது வெற்றிமாறனின் இந்த பேட்டியிலிருந்து உணர முடிகிறது. மேலும் இது பற்றி வெற்றிமாறன் கூறிய தகவல்களை ஃபிலிமிபீட் தமிழ் யூட்யூபில் காணலாம்Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Chris Hemsworth Looked Like This In His First Acting Job See Extreme Throwback

<!-- -->Chris Hemsworth posted this. (Image courtesy: chrishemsworth)When it comes to some good old throwback pictures our favourite stars do not disappoint. The...