என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதை: கமல் குறித்து சினேகன் புகழாரம் | snehan thanked kamal

0
8
என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதை: கமல் குறித்து சினேகன் புகழாரம் | snehan thanked kamal


என் ஆயுள் உள்ளவரை கமலுக்கு நன்றிகளைக் கூறிக்கொண்டே இருப்பேன் என்று சினேகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். தனது காதலி கன்னிகாவை ஜூலை 29-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவருக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் சினேகன் திருமணம் நடைபெற்றது. கமல் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தற்போது தனது திருமணத்தை நடத்தி வைத்ததற்கு கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சினேகன்.

இது தொடர்பாக சினேகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“எனக்கான எல்லா உறவுமாய் இருந்து என் இல்லற இணைவு விழாவை முன்னின்று நடத்திய என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதைக்கு என் ஆயுள் உள்ளவரை நன்றிகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். நன்றி அண்ணா”.

இவ்வாறு சினேகன் தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here