ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க மறுத்த படம்…ஸ்டார் படத்தின் 20 ஆண்டு கால பயணம் | Did you know, A.R.Rahman refused to compose music for one of the Prasanth movie

0
9
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க மறுத்த படம்…ஸ்டார் படத்தின் 20 ஆண்டு கால பயணம் | Did you know, A.R.Rahman refused to compose music for one of the Prasanth movie


பாதியில் வெளியேறிய சிம்ரன்

பாதியில் வெளியேறிய சிம்ரன்

பிரவீன்குமார், பிரசாந்த் கூட்டணியில் உருவான ஜோடி படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்து பணியாற்றினர். இந்த படத்தில் முதல் சிம்ரன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதால், அந்த வாய்ப்பு ஜோதிகாவிற்கு அளிக்கப்பட்டது.

அஜித் நடிக்க வேண்டிய படம்

அஜித் நடிக்க வேண்டிய படம்

அதே போல் ஹீரோவாக நடிக்க அஜித்திடம் தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் பிரசாந்த் மாற்றப்பட்டார். இந்த படம் முழுவதும் சென்னை மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்தில் படமாக்கப்பட்டது. அங்கு சுமார் 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோயிலை படக்குழுவினர் ரூ.2 லட்சம் கொடுத்து புனரமைத்தனர்.

பாடகர் கார்த்திக்கின் முதல் படம்

பாடகர் கார்த்திக்கின் முதல் படம்

2000 ம் ஆண்டுகளில் பிரபலமான பாடகராக இருந்த கார்த்திக், இந்த படத்தில் தான் அறிமுகமானார். அடி நேந்துக்கிட்டேன் பாடல் தான் அவர் பாடிய முதல் பாடல். அதன் பிறகு பல படங்களில் ஏராளமான பாடல்களை அவர் பாடினார். தெலுங்கிலும் இந்த பாடலை கார்த்திக் பாடினார்.

இசையமைக்க மறுத்த இசைப்புயல்

இசையமைக்க மறுத்த இசைப்புயல்

இந்த படத்திற்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் தான் பிஸியாக இருப்பதாகக் கூறி அவர் மறுத்துவிட்டாராம். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார் டைரக்டர் பிரவீன். இதனையடுத்து இந்தியில் Thakshak மற்றும் Earth படங்களுக்காக ரஹ்மான் அமைத்த இசையை அவரிடம் கேட்டு இந்த படத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

ஹிட்டான பாடல்கள்

ஹிட்டான பாடல்கள்

மனசுக்குள் ஒரு புயல், தோம் கருவில் இருந்தோம், ரசிகா ரசிகா, மச்சினியோ மச்சினியே ஆகிய பாடல்களின் இசை வேறு படத்திற்காக உருவாக்கப்பட்டவை. இருந்தாலும் இந்த பாடல்களை, படம் ஆகியன ஹிட் ஆகின. 5 பாடல்களை வைரமுத்து, பிரைசூடன், பழனி பாரதி ஆகியோர் எழுதி இருந்தனர். ஜோடி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரவீன், பிரசாந்த், ஏ.ஆர்.ரஹ்மா, சிம்ரன் ஆகியோர் இந்த படத்திலும் இணைய முடிவு செய்யப்பட்டது.

தோல்விக்கு காரணம் ரஹ்மானா

தோல்விக்கு காரணம் ரஹ்மானா

தமிழில் ஓரளவிற்கு பேசப்பட்ட இந்த படம் பிறகு தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டது. இந்த படம் பல விதமான விமர்சனங்களைப் பெற்றது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் கலந்து அமைக்கப்பட்ட இந்த படத்திற்காக பிரசாந்த் பல ரிஸ்கான சண்டைப் பயற்சிகளை மேற்கொண்டார். ரஹ்மான் இசையமைக்க மறுத்ததும் இந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என கூறப்பட்டது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here