ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

0
49

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் நெருங்கி வரும் நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

ஏனெனில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இந்த இ-ஸ்கூட்டருக்கு வழங்கவுள்ள 10 நிறத்தேர்வுகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த வாரத்தில் வெளியிட்டு இருந்தது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

10 நிறங்களின் பெயர்கள் தற்போதைக்கு வெளியிடப்படாவிட்டாலும், 10 நிறங்களிலும் ஸ்கூட்டர் எவ்வாறு இருக்கும் என்பதை ஒரே படத்தில் தெரியப்படுத்தி இருந்தனர். அதற்கு முன்னர் எந்தெந்த நிறங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற விரும்புகிறீர்கள்? என டுவிட்டரில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் கேட்டிருந்தார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

இதற்காக அவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் சில நிறங்களை தேர்வுகளாக கொடுத்து இருந்தார். அதேபோன்று தற்போது, தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடை எந்த அளவில் எதிர்பார்க்கிறீர்கள் என கேட்டு மீண்டும் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

இதில் 80kmph, 90kmph மற்றும் 100kmph-க்கு குறைவாக என்ற தேர்வுகளை வழங்கியுள்ளார். முந்தைய கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமாக, கூறப்பட்ட நிறங்கள் அத்தனையையும் பிடித்தவர்களுக்காக நான்காவதாக, ‘இவையனைத்தும்’ தேர்வை கொடுத்திருந்தார்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

அதேபோன்று தற்போது, “வேகத்தை பற்றி கவலையில்லை, எனக்கு இந்த ஸ்கூட்டர் கிடைத்தால் போதும்” என்ற தேர்வை நான்காவதாக சிஇஓ வழங்கியுள்ளார். பாவிஷ் அகர்வாலின் இந்த கருத்துக்கணிப்பு டுவிட்டர் பதிவில் இருந்து, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு குறைந்தப்பட்சம் 80kmph அளவிலாவது கொண்டுவரப்படும் என்பது தெரிய வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

மேலும், ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்படுவதை போன்று ஸ்கூட்டரின் வேகத்தை தீர்மானிக்கும் டிரைவிங் மோட்கள், ஓலா இ-ஸ்கூட்டரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இப்போதுதான் மிக மெதுவாகவே வளர்ச்சியடைந்து வருவதற்கு காரணம், முந்தைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் குறைவான அதிகப்பட்ச வேகமாகும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

வேகம், இ-ஸ்கூட்டர்களின் விற்பனையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனாலேயே இ-ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுப்படும் நிறுவனங்கள் வாகனத்தின் டாப்-ஸ்பீடை நிர்ணயிப்பதில் கூடுதல் கவனத்தை செலுத்துகின்றன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை? வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்ட ஓலா

ஆனால் இ-ஸ்கூட்டருக்கு அதிகளவிலான டாப்-ஸ்பீடை வழங்க வேண்டுமென்றால், அதற்கு ஏற்ப அதிக செயல்திறன் கொண்ட, அதிகம் சார்ஜ் செய்ய வேண்டிய பெரிய அளவிலான பேட்டரி தொகுப்புகளை வழங்க வேண்டியிருக்கும். இதனால் இந்த விஷயத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எவ்வாறு செயல்பட உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here