ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது… என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

0
8
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது… என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவின் 400 நகரங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்படவுள்ள தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஓலா நிறுவனம் இதனை ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் என அழைக்கிறது. எந்தெந்த நகரங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன? என்ற விபரம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு இருக்கும் பற்றாக்குறையால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். எனினும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கு வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

பேட்டரியில் 50 சதவீதம் சார்ஜ் இருந்தாலே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 75 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். அதே சமயம் 100 சதவீதம் சார்ஜ் இருந்தால், 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மிக சிறப்பான ரேஞ்ச் என்று கூறலாம். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றியோ அல்லது ரேஞ்ச் பற்றியோ வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தற்போது முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திலேயே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 499 ரூபாய் செலுத்தினாலே, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பி வருகிறது. இந்த சூழலில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வரவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய தகவல் வெளியானது... என்னனு தெரிஞ்சா உடனே புக் பண்ணீருவீங்க!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில், அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை மட்டும் சரியாக நிர்ணயம் இருந்தால், பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here