Tuesday, July 27, 2021
Homeசினிமா செய்திகள்கண்ணம்மாவை தேடிச் செல்லும் பாரதி...க்ளைமேக்சை நெருங்குகிறதா பாரதி கண்ணம்மா? | Did Bharathi Kannamma serial...

கண்ணம்மாவை தேடிச் செல்லும் பாரதி…க்ளைமேக்சை நெருங்குகிறதா பாரதி கண்ணம்மா? | Did Bharathi Kannamma serial move towards climax ?


ரீமேக் சீரியல்கள்

ரீமேக் சீரியல்கள்

இந்தி டிவி சீரியலான தியா அவுர் பாட்டி ஹம் என்ற தொடர் தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பானது. இதே கதை தற்போது ராஜா ராணி 2 என்ற பெயரில் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதே போன்று மலையாள டிவி சீரியலான கருத்தமுத்து ரீமேக் தான் தற்போது பாரதி கண்ணம்மாவாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா கதை

பாரதி கண்ணம்மா கதை

கருப்பாக இருக்கும் பெண் அதனால் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்வதாக கதை ஆரம்பமாகிறது. பிறகு பணக்கார குடும்பத்தை சேர்ந்த டாக்டர், கருப்பாக இருக்கும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மருமகளின் நிறத்தை காரணமாக காட்டி அவரை நிராகரிக்கும் பணக்கார மாமியார், பிறகு புரிந்து கொண்டு அன்பை பொழிகிறார்.

தொடரும் கதை

தொடரும் கதை

காதலை பொழியும் டாக்டர் கணவர், குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என டாக்டர்கள் சொல்லிய பிறகு திடீரென மனைவி கர்ப்பமடைவதால், டாக்டர் தோழியின் பேச்சை நம்பி மனைவியை சந்தேகப்படுகிறார். அதனால் கணவன் மனைவி பிரிவு, இரட்டை குழந்தைகளில் ஒன்றை பிரிவது என கதை நகர்கிறது.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

இதில் நேற்றைய எபிசோடில், பாரதியிடம் வளரும் ஹேமாவின் உயிரை காப்பாற்ற கண்ணம்மாவை அழைத்து வர செல்கிறார். இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ப்ரோமோவில், கண்ணம்மாவிடம் விஷயத்தை கூறி கூப்பிடுகிறார் பாரதி. முதலில் மறுக்கும் கண்ணம்மா, பிறகு ஹேமாவிற்காக வருகிறேன் என கூறி காரில் செல்கிறார்.

பாரதிக்கு உண்மை தெரிய வருமா

பாரதிக்கு உண்மை தெரிய வருமா

காரில் செல்லும் போது பாரதிக்கு, காதலிக்கும் காலத்தில் நடந்த பழைய நிகழ்வுகள் நினைவிற்கு வருகிறது. டென்ஷனாக காரை ஓட்டும் பாரதிக்கு தண்ணீர் கொடுத்து, சமாதானப்படுத்தி, ஆறுதல் வார்த்தை பேசுகிறார் கண்ணம்மா. மருத்துவமனை வரும் கண்ணம்மாவிற்கும், பாரதிக்கும் ஹேமா தங்களின் மகள் தான் என்ற உண்மை தெரியுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா முடிய போகிறதா

பாரதி கண்ணம்மா முடிய போகிறதா

பாரதி, கண்ணம்மாவை ஏற்கும் மனநிலைக்கு வருவதால் ஹேமா, லட்சுமி இருவரும் இவர்களின் குழந்தைகள் என்ற உண்மை, வெண்பா செய்த தில்லுமுல்லு ஆகியவை தெரிய வேண்டியது தான் மீதம் உள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் க்ளைமாக்சை நெருங்குவதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's