குழந்தை நட்சத்திரமாக
மலையாளத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் மூலம் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான நேரம் படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது
காதலித்து திருமணம்
இந்த படத்தில் நஸ்ரியா ஜோடியாக நிவின் பாலி நடித்திருப்பார். க்யூட் எக்ஸ்பிரஷன்கள் அழகான நடிப்பு என முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. நேரம் படம் மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார்.மேலும் நய்யாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன இந்த நிலையத்தில் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்
புகைபிடிப்பது மது அருந்துவது
மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான டிரான்ஸ் படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நஸ்ரியா புகைபிடிப்பது மது அருந்துவது என வித்தியாசமான ரோலில் நடித்து அசத்தி இருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
தெலுங்கில் அறிமுகம்
இந்த நிலையில் இதுவரை தமிழில் தமிழ் மற்றும் தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மட்டும் எடுத்து வந்த நஸ்ரியா முதன் முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார் நானியின் நடிப்பில் உருவாகியுள்ள அடடே சுந்தரா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக அறிமுகி உள்ளார். இப்படம் தமிழ்,தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது
வீட்டிலேயும் அப்டித்தான் நடந்து கொள்வார்
அடடே சுந்தரா படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நஸ்ரியா சமீபத்தில் தனியார் யூடியூப் ப நேர்காணலில் கணவர் பகத் பாசில் ஒரு படத்தில் எந்த கதாபாத்தில் நடிக்கிறாரோ அதேபோலத்தான் வீட்டில் அவரது நடவடிக்கைகளும் இருக்கும். அப்படித்தான் எங்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நேரத்தில் பெங்களூரு டேஷ் படத்தில் இணைந்து நடித்தபோது அந்தப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் என்னவோ அதே போல தான் நாங்கள் டேட்டிங் செய்யும் போதும் அவரது நடவடிக்கைகள் இருந்தது. அந்த அளவிற்கு நடிப்பில் மூழ்கிக் கிடப்பார் என கூறியுள்ளார்.