கமல் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறார் கவிஞர் சினேகன் | Snehan marriage to be done in the presence of KamalHasan

0
19
கமல் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கிறார் கவிஞர் சினேகன் | Snehan marriage to be done in the presence of KamalHasan


கவிஞர் சினேகன் வரும் 29 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார்.

இது தொடர்பாக சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்தத் திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ்நிலையில் காலம் நம்மை நகர்த்திச் செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது.

எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here