கவிஞர் சினேகனுக்கு திருமணம்… பொண்ணு நடிகையாமே… யார் அந்த நடிகை ! | lyricist snehan marriage to be held on july 29

0
136
கவிஞர் சினேகனுக்கு திருமணம்… பொண்ணு நடிகையாமே… யார் அந்த நடிகை ! | lyricist snehan marriage to be held on july 29


கவிஞர் சினேகன்

கவிஞர் சினேகன்

பாடலாசிரியர், நடிகர், எழுத்தாளர், கவிஞர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் சினேகன். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் 5 வருடம் பணியாற்றி உள்ளார். பின்னர் புத்தம் புது பூவே என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஏராளமான பாடல்கள்

ஏராளமான பாடல்கள்

பாண்டவர்பூமி திரைப்படத்தில் இவர் எழுதிய தோழா தோழா பாடல், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இவர் இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சி

மக்கள் நீதி மையம் கட்சி

சினேகன் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சினேகனுக்கு திருமணம்

சினேகனுக்கு திருமணம்

இந்நிலையில் கவிஞர் சினேகனுக்கு ஜூலை 29ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமலின் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. சினேகன் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்ய உள்ளார். இவர் அமுதா என்ற சீரியலில் நடித்தவர். மேலும், திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு தொடரிலும், சமுத்திரக்கனியின் சாட்டை படத்திலும் நடித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

இந்த தகவலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், கவிஞர் சினேகன் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என். மூலம் அறிமுகமானவர் இனிய நண்பர். வரும் ஜூலை 29ந் தேதி செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று இந்த தகவலை தொல் திருமாவளவன் உறுதிப்படுத்தி உள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here