Price: ₹49.00
(as of May 29,2022 09:04:22 UTC – Details)
***
"தமிழர்கள் கவிதையின் வடிவத்தைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்; ஆனால் கவிதைபற்றி ஆராயவில்லை" என்றார் புதுமைப்பித்தன். சுமார் அறுபதாண்டுகளுக்கு முன் அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும், இன்றும் நிலைமை அப்படியொன்றும் பெரிதாக மாறிவிடவில்லைதான். நவீன தமிழில் கவிதை பற்றிய கட்டுரைகள் சிலரால் எழுதப்பட்டுள்ள போதிலும் சிறுகதை, நாவல் குறித்து எழுதப்பட்ட அளவில் கவிதை பற்றியும் கவிஞர்கள் பற்றியும் விரிவாக எழுதப்பட வில்லை – பேசப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த ஆதங்கம் தனக்கிருப்பதாக இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிடும் கவிஞர் விக்ரமாதித்யன். “நல்ல கவிதைகளைக் கண்டு சொல்லவே கவிதைரசனை என்று எழுதலாயிற்று" என்கிறார். ‘கவிதைக்கு அனுபவமும் ரசனையுமே போதுமானவை; வியாக்யானமும் விமர்சனமும் அவ்வளவாய் வேண்டியதில்லை’ என்பது இவரது அபிப்ராயம். கவிதையைக் கூறுபோட்டுப் பார்க்காமலேயே கவிதைரசனை உருவாக முடியும், வளர முடியும் என்பதும் இவரது நம்பிக்கையாக இருக்கிறது.
– ராஜமார்த்தாண்டன் (முதற்பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரையில்)
ASIN:B09H3D8PD9
Publisher:சந்தோஷ் புக்ஸ் (23 September 2021)
Language:Tamil
File size:1751 KB
Simultaneous device usage:Unlimited
Text-to-Speech:Not enabled
Screen Reader:Supported
Enhanced typesetting:Enabled
Word Wise:Not Enabled