காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

0
17

புத்தம் புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.57 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள டியாகோ என்ஆர்ஜி மாடல் சில ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.

காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

ரூ.6.57 லட்சம் என்பது மேனுவல் தேர்வில் டியாகோ என்ஆர்ஜி காரின் விலை ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் ரூ.7.09 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டியாகோ என்ஆர்ஜி காருக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள டாடா நிறுவனத்தின் டீலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

இதனால் இந்த காரின் டெலிவிரிகளை விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்பெஷல் எடிசன் ஹேட்ச்பேக் காருக்கு வழங்கப்பட்டுள்ள நிறத்தேர்வுகளாக,

 • அடர்ந்த காட்டின் பச்சை
 • சிவப்பு
 • பனியின் வெள்ளை
 • மேகத்தின் சாம்பல்
 • உள்ளிட்டவை அடங்குகின்றன.

  காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

  வெளிப்பக்க தோற்றம்

  புதிய என்ஆர்ஜி வேரியண்ட்டின் வெளிப்பக்கத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றிலும் கருப்பு நிற கூடுதல் பிளாஸ்டிக் பேனல்களினால், வழக்கமான டியாகோ மாடலில் இருந்து இந்த ஸ்பெஷல் வேரியண்ட் தோற்றத்தில் வேறுபடுகிறது.

  காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

  அத்துடன் ஆஃப்-ரோடு திறனிற்காக காரின் சஸ்பென்ஷன் அமைப்பிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. என்ஆர்ஜி காரின் மற்ற வெளிப்புற அம்சங்களாக,

  • 15-இன்ச் அலாய் சக்கரங்கள்
  • 181மிமீ-இல் க்ரவுண்ட் க்ளியரென்ஸ்
  • கருப்பு நிறத்தில் மேற்கூரை
  • மேற்கூரை தண்டவாள கம்பிகள்
  • உள்ளிட்டவற்றை கூறலாம்.

   காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

   உட்புற தோற்றம் & தொழிற்நுட்பங்கள்

   உட்புற கேபினில் பெரும்பான்மையான வசதிகளை ஸ்டாண்டர்ட் டியாகோ மாடலில் இருந்து இந்த புதிய வேரியண்ட் பெற்றுள்ளது. இருப்பினும் டியாகோவின் மற்ற வேரியண்ட்களில் இருந்து தனித்து தெரிவதற்காக சில மாற்றங்களை புதிய என்ஆர்ஜி மாடல் ஏற்றுள்ளது.

   காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

   இதில்,

   • புதிய கரியின் கருப்பு நிறத்தில் கேபின்
   • டெகோ டிசைனிலான தையல்களுடன் துணியால் போர்த்தப்பட்ட இருக்கைகள்
   • பளிச்சிடும் நிறத்தில் டேஸ்போர்டின் இரு முனைகளில் ஏசி துளைகள்
   • 8-ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்ட் சிஸ்டம்
   • ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே
   • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
   • என்ஜினை ஸ்டார்ட் செய்ய பொத்தான்
   • போன்றவை அடங்குகின்றன.

    காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

    என்ஜின் & டிரான்ஸ்மிஷன்

    மற்றப்படி என்ஜினில் எந்த வேறுபாடும் இல்லை. டாடா டியாகோவில் வழக்கப்பட்டுவரும் வழக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர், ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் தான் புதிய என்ஆர்ஜி காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

    காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

    அதிகப்பட்சமாக இந்த பெட்ரோல் என்ஜின் 6,000 ஆர்பிஎம்-இல் 84.5 பிஎச்பி மற்றும் 3,300 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி தேர்வில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

    காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

    பாதுகாப்பு அம்சங்கள்

    உலகளாவிய என்கேப் (GNCAP) மோதல் சோதனையில் 5ற்கு 4 நட்சத்திரங்களை பெற்றுள்ள டியாகோ என்ஆர்ஜி ஹேட்ச்பேக் கார் இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு வசதிகளுடன் மிகவும் பாதுகாப்பான காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

    இந்த டாடா காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக,

    • கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
    • பகல் & இரவு நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய பின்பக்கத்தை காட்டும் உட்புற கண்ணாடி
    • ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா
    • அவசர காலத்தில் இழுத்து பிடித்து கொள்ளக்கூடிய சீட் பெல்ட்கள்
    • முதலியவற்றை கூறலாம்.

     காத்திருந்தது போதும்!! 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆரம்ப விலை ரூ.6.57 லட்சம்

     விற்பனையில் உள்ள டாடா டியாகோ காட்டிலும் புதிய டியாகோ என்ஆர்ஜி மாடல் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது. இதனால் முரட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்பை விரும்புபவர்கள் தாரளமாக டியாகோ என்ஆர்ஜி காரை தேர்வு செய்யலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here