காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்… தேடும் காவல்துறை… இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க…

0
23
காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்… தேடும் காவல்துறை… இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க…

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு விதிமீறல்வாதிகள்மீது காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இருப்பினும், போதை ஆசாமிகள், வாகன ஸ்டண்ட் பிரியர்கள் இதைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

அந்தவகையில், வாகன ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரையே தாங்கள் தேடி வருவதாக மஹாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் சிலர் காருக்குள் அமராமல், அதன் மீது ஏறியவாறு பயணித்ததுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

இந்த வீடியோவின் அடிப்படையிலேயே அனைத்து இளைஞர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயாராகியிருக்கின்றனர். சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் உல்ஹஸ்நகர், கல்யாண் மலங்கட் பகுதியில் உள்ள ஹில் லைன் காவல்நிலைய அதிகாரிகளே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

இனியும் இதுபோன்ற விதிமீறல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த ஸ்டண்ட் விவகாரத்தில் சற்று அதி-தீவிரத்துடன் காவல்துறை களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகன போக்குவரத்து விதிகளின்படி பொதுவெளியில் இதுபோன்று வாகன ஸ்டண்டில் ஈடுபடுவது குற்ற செயலாகும்.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

இதனை மீறும் வகையிலேயே இளைஞர்களின் செயல் அமைந்திருக்கின்றது. ஆகையால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, அவர்கள் பயணித்த மாருதி எஸ் க்ராஸ் காரையும் பறிமுதல் செய்ய தயாராகி இருப்பதாக காவல்துறையில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. காரின் பதிவெண் மங்கலாக தெரிவதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

இந்த காரின் முகப்பு பகுதியிலேயே ஓர் இளைஞர் படுத்தும், ஜன்னல்களில் சிலர் அமர்ந்தும் பயணித்திருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே இணையத்தில் வைரலாகி தற்போது இளைஞர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரின்மீது படுத்து சென்ற இளைஞர்கள்... தேடும் காவல்துறை... இப்படி பண்ணாதீங்கனு சொன்ன எங்க கேக்குறாங்க...

சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் சிலர் இதுபோன்ற விநோத செயல்களில் ஈடுபடுவதும், அவர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையானதாக மாறி வருகின்றது. கேரளாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

சிசிடிவி, சக வாகன ஓட்டிகள் புகார் ஆகியவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விதிமீறல் வாதிகளின்மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே மஹாராஷ்டிரா காவல்துறை விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த விதிமீறல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருக்கின்றது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here