காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்… ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

0
8
காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்… ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

குழந்தைகளுடன் காரில் பயணம் மேற்கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். தொலைதூர பயணம் என்றால், குழந்தைகளுக்கும் மறக்க முடியாத சுகமான அனுபவங்கள் கிடைக்கலாம். ஆனால் ஒரு சில சமயங்களில், தொலைதூர பயணங்களின்போது குழந்தைகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

இதற்கு மோஷன் சிக்னெஸ் (Motion Sickness) முக்கியமான காரணமாக இருக்கலாம். மோஷன் சிக்னெஸ் என்றால் என்ன? இது ஏன் குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது? காரில் பயணம் செய்கையில், செல்போன் பயன்படுத்தினாலோ அல்லது புத்தகம் படித்தாலோ மோஷன் சிக்னெஸ் ஏற்படுவது ஏன்? என்பது போன்ற விஷயங்களை எல்லாம் இந்த செய்தியில் விரிவாக கூறியுள்ளோம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

அத்துடன் மோஷன் சிக்னெஸ் பிரச்னையை எப்படி தவிர்ப்பது? என்பதையும் விரிவாக வழங்கியுள்ளோம். உங்கள் கண்கள், காதுகள் மற்றும் உடல் அனுப்பும் தகவல்களை மூளையால் உணர முடியாதபோதுதான், மோஷன் சிக்னெஸ் பிரச்னை ஏற்படும். குழந்தைகளை ஏன் மோஷன் சிக்னெஸ் அதிகமாக பாதிக்கிறது? என்பது தெரிந்தால், உங்களால் இதனை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

குழந்தைகள் மிகவும் உயரம் குறைந்தவர்களாக இருப்பவர்கள் என்பதால், காரில் பயணிக்கும்போதே சில சமயங்களில் அவர்களால் ஜன்னல் வழியே வெளியே பார்க்க முடியாது. ஆனால் அவர்களுடைய காது கார் ஓடிக்கொண்டிருக்கும் சத்தத்தை உணர்ந்து மூளைக்கு தகவல் அனுப்பும். அந்த நேரத்தில் குழந்தைகளின் கண்களோ புத்தகம் படித்து கொண்டிருக்கலாம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

அல்லது அவர்கள் செல்போனில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருக்கலாம். எனினும் அவர்களின் உடல் அமர்ந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் காதுகளோ, ஒரு இயக்கம் நடைபெற்று கொண்டுள்ளது (கார் ஓடிக்கொண்டிருப்பது) என்ற தகவலை தொடர்ந்து மூளைக்கு அனுப்பி கொண்டிருக்கும். இவ்வாறு முரண்பாடான தகவல்களை மூளை பெறும்போதுதான் மோஷன் சிக்னெஸ் ஏற்படுகிறது.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

மோஷன் சிக்னெஸ் காரணமாக வாந்தி வருவது, அதிகமாக வியர்ப்பது போன்ற பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க கூடும். மோஷன் சிக்னெஸ் என்றால் என்ன? என்பது தற்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்புகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மோஷன் சிக்னெஸ் ஏற்படும் என்பது கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வளவுதான். கார் பயணம் செய்யும்போது, சுமாராக மூன்றில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் மோஷன் சிக்னெஸ் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் 2 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மோஷன் சிக்னெஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்பதால், கவனத்துடன் இருப்பது சிறந்தது. இயக்கத்தை உணரும் உடல் உறுப்புகளான கண்கள், காதுகள், தசைகள் மற்றும் மூட்டுக்களிடம் இருந்து மூளை சிக்னலை பெறும். ஆனால் இந்த உறுப்புகள் முரண்பட்ட தகவல்களை அனுப்பும்போது, நீங்கள் நிலையாக ஓரிடத்தில் உள்ளீர்களா? அல்லது நகர்ந்து கொண்டிருக்கிறீர்களா? என்பது புரியாமல் மூளை குழம்பி விடும்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

இதன் காரணமாகவே மோஷன் சிக்னெஸ் ஏற்படுகிறது. மோஷன் சிக்னெஸ் ஏற்பட்டால், வாந்தி வருவது, அதிகமாக வியர்ப்பது போன்ற பிரச்னைகளுடன், தலை சுற்றல், சோர்வு, தலைவலி, எரிச்சல், எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

காரில் பயணம் செய்யும்போது நீங்கள் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்தாலோ அல்லது புத்தகங்களை வாசித்து கொண்டிருந்தாலோ உங்களுக்கு மோஷன் சிக்னெஸ் ஏற்படலாம். உங்கள் காது இயக்கத்தை உணரும்போது, கண்கள், தசைகள் மற்றும் மூட்டுக்கள் போன்றவை இயக்கத்தை உணரவில்லை எனும்பட்சத்தில், மூளைக்கு முரண்பாடான தகவல்கள் சென்று மோஷன் சிக்னெஸ் ஏற்படலாம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் மோஷன் சிக்னெஸ் ஏற்படுவதை ஒரு சில எளிய வழிகளின் மூலம் தவிர்க்கலாம். மோஷன் சிக்னெஸ் பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள குழந்தைகளை இருக்கையின் நடுவே அமர வைக்கலாம். இதன் மூலம் முன் பக்க விண்டுஷீல்டு தெளிவாக தெரிவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே மோஷன் சிக்னெஸ் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

ஏனெனில் குழந்தைகள் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை காதுகள் மற்றும் கண்கள் உணர்ந்து ஒரே மாதிரியான சிக்னலை மூளைக்கு அனுப்பும். குழந்தைகள் வெளிப்புறத்தை பார்க்காவிட்டால், அவர்கள் இயக்கத்தில் இருப்பதை கண்கள் உணராது. எனவே மூளைக்கு முரண்பாடான தகவல்கள் கிடைத்து, மோஷன் சிக்னெஸ் ஏற்படலாம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

காரின் ஓட்டுனர் ஏன் மோஷன் சிக்னெஸ் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஏனெனில் அவர் விண்டுஷீல்டு மற்றும் ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை நன்கு பார்த்து கொண்டே வருவார். இதன் காரணமாக காதுகளும் மற்றும் கண்களும் ஒரே மாதிரியான தகவலை மூளைக்கு அனுப்பும்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ளும்போது கூடுமான வரை செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது, புத்தகங்களை படிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இந்த செயல்பாடுகள் குழந்தைகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

அதேபோல் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைப்பதும், மோஷன் சிக்னெஸில் இருந்து உங்களை காக்கும். யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்பட்டால், புத்துணர்ச்சியான காற்று அவர்கள் மீண்டு வர உதவும். அதே போன்று சன்ரூஃப்பை திறந்து வைப்பதும் பயன் கொடுக்கும். இதுதவிர காரம் அதிகமாக உள்ள உணவுகளுக்கு பதில் மென்மையான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம்.

காரில் புக் படித்தால் ஒடம்பு சரியில்லாம போகும்... ஏன் தெரியுமா? இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க

பயணத்தின்போது மென்மையான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதேபோன்று குழந்தைகள் தூங்க கூடிய நேரத்தில் பயணம் செய்து விடுவதும் கூட மோஷன் சிக்னெஸ் பிரச்னையில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here