Homeதமிழ் Newsஆட்டோமொபைல்கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா,...

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி… அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!


கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி, 2022 பலேனோ, 2022 வேகன் ஆர், டிசையர் சிஎன்ஜி என மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து ஏராளமான கார்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

2022ம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளதால், நடப்பாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் மத்தியில் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

அதற்கு முன்பாக மேம்படுத்தப்பட்ட 2022 எர்டிகா மற்றும் 2022 எக்ஸ்எல்6 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த 2 கார்களும் வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2022 மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் 2022 மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஆகிய 2 கார்களும் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

அவ்வாறு சோதனை செய்யப்படும்போது சமீப காலங்களில் அவை பலமுறை கேமராவின் கண்களில் சிக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரில், புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

மாருதி சுஸுகி எர்டிகா காரில் தற்போதைய நிலையில் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டு வருகிறது. மிக நீண்ட காலமாக இருந்து வரும் இந்த கியர் பாக்சுக்கு பதிலாக, புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் பலத்த போட்டி... அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய மாருதி எர்டிகா, எக்ஸ்எல்6!

ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், 2022 மாருதி சுஸுகி எர்டிகா காரானது, புதிய க்ரில் அமைப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் காரின் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் 2022 எர்டிகாவில் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

How to choose the right Roborock robot vacuum cleaner

  Editor's Choice Best quality/price ratio The best self-cleaningRoborock Product Roborock S7. Roborock S7 MaxV Ultra Image Pros Extremely easy to install Hybrid tank for dust and water Self-cleaning station No cameras 180-minute run...