குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்… 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா… பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது…

0
21
குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்… 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா… பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது…

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த வாகனங்களில் விங்கர் மாடலும் ஒன்று. இந்த வாகனத்தையே ஆம்புலன்ஸாக மாற்றி குஜராத் மாநில அரசிடம் டாடா வழங்கியிருக்கின்றது. குஜராத் மாநில அரசின் சுகாதாரத்துறையிடம் அந்த வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

அண்மையில் மாநில அரசிடம் இருந்து 115 புதிய ஆம்புலன்ஸ்களுக்கான ஆர்டர் டாடாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே முதல் லாட்டாக 25 டாடா விங்கர் ஆம்புலன்ஸ்கள் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

இந்நிகழ்வு குஜராத்தின் காந்திநகர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசின் முக்கிய அதிகாரிகள் பலர் பங்குக் கொண்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலின் வீரியம் சற்றே குறைய தொடங்கியிருக்கின்றது. இருப்பினும், அதன் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போதும் லட்சத்தைத் தொட்ட வண்ணம் இருக்கின்றது. ஆகையால், ஆம்புலன்ஸ்களின் தேவை இப்போதும் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டே குஜராத் அரசு அண்மையில் டாடாவிற்கு ஆர்டர் கொடுத்தது.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

இதனடிப்படையில் தற்போது ஆம்புலன்ஸ்கள் டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என உயிர்காக்கும் கருவிகள் அனைத்தும் இடம் பெற்றிருக்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

டாடா நிறுவனம் விங்கர் வாகனத்தை மட்டுமின்றி மேஜிக் எக்ஸ்பிரஸ் வாகனத்தையும் ஆம்புலன்ஸாக மாற்றி வழங்கி வருகின்றது. இதேபோன்று எல்பி410 வாகனத்தையும் ஆம்புலன்ஸ் வெர்ஷனில் வழங்கி வருகின்றது. இதில் இரு ஸ்ட்ரெட்சரைக் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

நாடு முழுவதும் இப்போதும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைப் போக்கும் பொருட்டு ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு, தற்போதும் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குஜராத்திடம் இருந்து வந்த பெரிய ஆர்டர்... 25 ஆம்புலன்சுகளை டெலிவரி கொடுத்த டாடா... பற்றாக்குறைன்ற பேச்சுக்கே இடம் இருக்காது...

தமிழகத்தில்கூட சமீபத்தில் 200க்கும் மேற்பட்ட கால் டாக்சி வாகனங்கள் தற்காலிக ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின் பேரில் வாகனங்கள் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here