Monday, November 29, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார் - அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை விட்ட...

குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார் – அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை விட்ட ஜோதிமணி எம்பி!


BJP பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரது ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது.  அதனை அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் வெளியிட்டார்.  தற்பொழுது ஆபாச வீடியோவில் உள்ள வரும் அதனை வெளியிட்ட வெறுமென இரண்டு பேருமே கட்சியை விட்டு நீக்கி உள்ளார் பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை. 

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியதாவது, ” தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை உடனடியாக  ராஜினமா செய்யவேண்டும். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி,  பாஜகவின்  தற்போதைய மாநில  தலைவர் தங்கள்   கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை. குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டுவந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

ALSO READ அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம்? சு.வெங்கடேசன் கேள்வி

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பதுஎது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள்,அதை அந்தகட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்.  ஒன்றிய இணைஅமைச்சர் திரு. முருகன் தொடர்பாகவும் ஒரு பாலியல் வீடியோ இருப்பதாக மதன் சொல்லும் போது திரு. அண்ணாமலை அதை மறுக்கவில்லை. ஆக அதுவும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் மிக மோசமாகப் பேரம் பேசுகிறார்.  இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கையில்,காலில் விழுந்தாவது பாஜக  தலைவர்களை காப்பாற்ற இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்பேன்  என்கிறார்.  திரு.அண்ணாமலையைப் பொறுத்தவரை சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே?அவர்களைப் பற்றி திரு.அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது.  இவர் தான் தேசம் காப்பவர்! தமிழகத்துப் பெண்கள் தேசம் இல்லையா? எங்களுக்கு கண்ணியமும்,கௌரவமும் இல்லையா?

அப்படியென்றால் சாதாரண பெண்களுக்கு இந்த பாஜக தலைவர்களிடமிருந்து என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்?.  இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம்,கண்ணியம்,பாதுகாப்போடு தொடர்புடையது. எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை.  பாஜகவின் மாநில தலைவர்  திரு.அண்ணாமலை

சொந்த கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும்,கண்ணியத்தையும் உறுதிசெய்ய முடியாதவர்,சாதாரண பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர், பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் கடந்து போகிறவர்,பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds