Wednesday, December 8, 2021
Homeதமிழ் Newsஆட்டோமொபைல்கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், கொரோனா வைரஸ் பரவல் எல்லாம் இந்தியாவில் துவங்குவதற்கு முன்பே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Nexon எலக்ட்ரிக் எஸ்யூவி காரை Tata Motors நிறுவனம் கடந்த ஆண்டில் மொத்தமாக 2,600க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்துள்ளது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

இந்தியாவின் மிக சிறந்த பூஜ்ஜிய மாசு உமிழ்வு வாகனமாக விளங்கும் Tata Nexon EV-க்கு விலையை பொறுத்தவரையில் நேரடி போட்டி மாடல்கள் எதுவும் இல்லை . இதுவும் இந்த Tata எலக்ட்ரிக் காரின் விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதற்கு காரணமாகும். இருப்பினும் Nexon எலக்ட்ரிக் காரில் குறிப்பிடத்தக்க அப்கிரேட்களை கொண்டுவருவதில் Tata நிறுவனம் முனைப்புடன் உள்ளது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

இந்த வகையில் சமீபத்தில் Nexon EV-இன் டார்க் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் இயக்க ஆற்றல் அப்கிரேட்டையும் வழங்க Tata Motors திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள செய்திகளில், அதிகப்பட்சமாக 136பிஎஸ் (100கிலோவாட்ஸ்) என்ற இயக்க ஆற்றலில் இயங்கும் அளவிற்கு Nexon EV அப்கிரேட் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

தற்போதைய ஆற்றல் உடன் ஒப்பிடுகையில் இது 7 பிஎஸ் அதிகமாகும். Tata-வின் இந்த சப்-4மீ எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் எஸ்யூவி காரில் தற்சமயம் நிரத்தரமான காந்த ஒத்திசைவு மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டாரில் 30.2kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

இது அதிகப்பட்சமாக 129 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. Nexon EV-இன் பேட்டரியை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 312கிமீ தூரம் வரையில் இயங்கலாம் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மோட்டார்- பேட்டரியின் உதவியுடன் இந்த எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 9.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

பேட்டரியை வழக்கமான வீட்டு மின்சாரத்தின் மூலம் சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 8.5 மணிநேரங்களும், விரைவு சார்ஜிங் வசதியில் 0-வில் இருந்து 80% சார்ஜை வெறும் 1 மணிநேரத்தில் நிரப்பிவிடலாம். மற்றப்படி விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் Nexon EV-இன் மற்ற தொழிற்நுட்பங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

Tata Motors நிறுவனம் Nexon EV-இன் பேட்டரிக்கு 8-வருட/ 1.6 லட்ச கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. பேட்டரியை தவிர்த்து மற்றவை அனைத்திற்கும் 3 வருட/ 1.25 லட்ச கிமீ உத்தரவாதம் கிடைக்கிறது. மிக முக்கிய அம்சமாக சன்ரூஃப்-ஐ பெறும் இந்த எலக்ட்ரிக் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், உட்புறத்தில் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகின்றன.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

இவற்றுடன் லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் & ஸ்டேரிங் சக்கரத்தை கொண்ட இதன் உட்புற கேபினில் வாகனத்தின் இயக்கத்தை இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்க ஸ்மார்ட்போன் செயலி, பின்பக்கத்திற்கும் ஏசி துளைகள் உடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸில் காரை பார்க் செய்வதற்கு உதவியாக கேமிரா மற்றும் பாதுகாப்பிற்கு முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்டவையும் Nexon எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படுகின்றன.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

டார்க் எடிசனின் வருகைக்கு முன்பு வரையில், எக்ஸ்.எம், எக்ஸ்.இசட் மற்றும் எக்ஸ்.இசட்+ லக்ஸ் என்ற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் இந்த Tata எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ட்ரிம் நிலைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இந்திய இளம் தலைமுறையினரை கவரும் நோக்கில், டார்க் எடிசன்கள் Nexon மாடலில் மட்டுமின்றி ஹெரியர், அல்ட்ராஸ் போன்ற மற்ற பிரபலமான Tata கார்களிலும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

பெயருக்கு ஏற்றாற்போல் இந்த ஸ்பெஷல் எடிசன்கள் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அத்துடன் கருப்பு நிற அலாய் சக்கரங்கள், ஸ்மோக்டு எல்இடி டெயில்லேம்ப்கள் உடன் இதன் வெளிப்பக்கம் அலங்கரிக்கப்படுகிறது. வெளிப்பக்கத்தை போல் Nexon EV டார்க் எடிசனின் உட்புறமும் அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.

கூடுதல் இயக்க ஆற்றலை பெறவுள்ள Tata Nexon Electric கார்!! விபரங்கள் இணையத்தில் லீக்!

ஆனால் ஸ்டாண்டர்ட் Nexon எலக்ட்ரிக் காரின் கேபினை பளிச்சிடும் பழுப்பு நிறத்தில் பெறலாம். அதேபோல் டார்க் எடிசன் என்பதை வெளிக்காட்டும் வகையில் ‘Dark’ லோகோக்கள் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. Tata Nexon EV டார்க் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds