கொரோனா காலத்தில் இதய பிரச்சனை வரக்கூடாதா? அதுக்கு இந்த சின்ன விஷயத்தை செய்யுங்க போதும்.. | Coronavirus: Natural Remedies To Take Care Of Your Heart’s Health In Times Of COVID

0
23
கொரோனா காலத்தில் இதய பிரச்சனை வரக்கூடாதா? அதுக்கு இந்த சின்ன விஷயத்தை செய்யுங்க போதும்.. | Coronavirus: Natural Remedies To Take Care Of Your Heart’s Health In Times Of COVID


மருத மரப்பட்டை பொடி (Arjuna Bark Powder)

மருத மரப்பட்டை பொடி (Arjuna Bark Powder)

மருத மரப்பட்டை இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், இது இதயத்தை பாதுகாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு இது இதய தசைகளை வலுப்படுத்தி, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமான ப்ரீ-ராடிக்கல்களை எதிர்க்கும். முக்கியமாக இதில் எபிகல்லோகாடெசின் காலேட் (EGCG) என்பது க்ரீன் டீயில் உள்ள முக்கிய ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகும். இது ஏராளமான உடலியல் செயல்முறைகள் மற்றும் உணவு செரிமானத்திலிருந்து உருவாகும் நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் க்ரீன் டீ டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

மஞ்சள்

மஞ்சள்

இந்தியாவில் சமைக்கப்படும் அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் முக்கிய மசாலா பொருளாக இருப்பது மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் செயலில் உள்ள மூலப்பொருள் உள்ளது. இது தான் இந்த மசாலாவிற்கு மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த பண்புகள், இதய தசைகளை பாதுகாக்கிறது. பல்வேறு ஆய்வுகளில் குர்குமினில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளன. மேலும் இது ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது. மாரடைப்பு இரத்த குழாய்கள் குறுகுவதால் ஏற்படுகிறது. மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த குழாய்களில் உள்ள வீக்கத்தை குறைக்க எதிர்த்துப் போராட பெரிதும் உதவி புரியும். ஆகவே அன்றாட உணவில் மஞ்சளை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

MOST READ:9 வருடமாக அவதிப்படும் சிறுமி.. ஆபரேஷன் செய்ய உதவுங்கள்!

பூண்டு

பூண்டு

பூண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அற்புதமான பொருள். பூண்டில் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமின்றி, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜிங்க், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. இத்தகைய பூண்டு எகிப்திய காலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அக்காலத்தில் பூண்டு, கட்டிகள் மற்றும் சில இதய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டது. பூண்டு எப்படி இதய பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.

1. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

1. கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

இதய நோய்களுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று கொலஸ்ட்ரால். கல்லீரலில் ஹெட்ஜிங் கிக்லே ரிடக்டேஸ் எனப்படும் நொதியால் பாதிக்கப்படும் தொகுப்பு செயல்முறையால் கொலஸ்ட்ரால் உருவாகிறது. ஆனால் பூண்டு இந்த நொதியை தடுக்கவும், கல்லீரலில் கொழுப்பில் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

2. இரத்தம் உறைவதைக் குறைக்கும்

2. இரத்தம் உறைவதைக் குறைக்கும்

மாரடைப்புக்கு வழிவகுக்கும் மற்றொரு பொதுவான பிரச்சனை இரத்த உறைவு ஆகும். இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் எனப்படும் இரத்த அணுக்கள் ஒன்றிணைந்து த்ரோம்பஸ் எனப்படும் உறைவை உருவாக்குகின்றன. ஆனால் பூண்டு சாப்பிடுவது இரத்த அணுக்களின் ஒட்டும் தன்மையைக் குறைப்பதுடன், இரத்த உறைதலையும் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

உயர் இரத்த அழுத்தம் கூட மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும். பூண்டில் இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கூறுகள் காணப்படுகிறது. ஆகவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய பிரச்சனைகளைத் தடுக்கவும், பூண்டு ஒரு நல்ல உணவுப் பொருள்.

4. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும்

4. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என்பது இதய தமனிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ப்ரீ ராடிக்கல்கள் ஆகும். உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நோயாளிகளுக்கு தினமும் பூண்டு சப்ளிமெண்ட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தது. அதில் பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் கணிசமாகக் குறைப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இஞ்சி

இஞ்சி

இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு முக்கியப் பொருள் இஞ்சி. இத்தகைய இஞ்சியில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் உட்பொருட்கள் அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆய்வுகளில் கூட இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அது கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிப்பது தெரிய வந்தது. மேலும் மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகளுள் ஒன்று சர்க்கரை நோய். பொதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அது இரத்த நாளங்களை சேதப்படுத்தி, இரத்தக் குழாய்களை குறுகச் செய்து, மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி ஒரு பிரபலமான மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த மூலிகை பொருளாகும். தினமும் இஞ்சியை உட்கொண்டு வந்தால், அது உணவிற்கு முன்பான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதோடு இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கவும் உதவுகிறது. எனவே தினமும் இஞ்சி டீ தயாரித்து குடிக்க முயலுங்கள்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாய் பலரது விருப்பமான காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள் தான், இந்த காயின் காரச் சுவைக்கு காரணம். 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கேப்சைசின் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டது. அதோடு இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரை அளவைக் குறைக்கவும், இதயத் தசைகளில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவது கண்டறியப்பட்டது. எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், குடைமிளகாயை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here