கொரோனா நிவாரண நிதி… தமிழக அரசுக்கும் பெப்சிக்கும் தலா ரூ 1 லட்சம்… ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்கினார்! | Aishwarya Rajesh contributes Rs 1 lakh to Cm public Relief fund

0
51
கொரோனா நிவாரண நிதி… தமிழக அரசுக்கும் பெப்சிக்கும் தலா ரூ 1 லட்சம்… ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்கினார்! | Aishwarya Rajesh contributes Rs 1 lakh to Cm public Relief fund


அசுர வேகத்தில்

அசுர வேகத்தில்

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை அசுரவேகத்தில் பலரின் உயிரை காவுவாங்கி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வசதிகளை அரசாங்கம் அதிகரிக்க உதவுவதற்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல திரைப்பிரபலங்ககள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

ரூ .1 லட்சம் நிதி உதவி

ரூ .1 லட்சம் நிதி உதவி

இதுவரை நடிகர்கள் மட்டுமே நிதி உதவி அளித்து வந்த நிலையில், நடிகை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ .1 லட்சம் வழங்கி உள்ளார். அதேபோல, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், FEFSI தொழிற்சங்கத்திற்கும் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

50 லட்சம் நிதி உதவி

50 லட்சம் நிதி உதவி

முன்னதாக, ரஜினிகாந்த் 50 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். அஜித் குமார், சூரியா, கார்த்தி மற்றும் சிவகுமார், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஷங்கர், வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நிதி உதவி செய்து வருகின்றனர்.

கைவசம்

கைவசம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, த கிரேட் இந்தியன் கிச்சனின் தமிழ் ரீமேக் மற்றும் மோகன்தாஸ் உள்ளிட்ட உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், பூமிகா திரைப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் உள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here