Homeசினிமா செய்திகள்கோலிவுட் ஸ்பைடர்: சமந்தாவின் பாலிவுட், ஹாலிவுட் பிளான்; வெற்றிமாறனுக்கு நோ சொன்னாரா டாப்ஸி?!

கோலிவுட் ஸ்பைடர்: சமந்தாவின் பாலிவுட், ஹாலிவுட் பிளான்; வெற்றிமாறனுக்கு நோ சொன்னாரா டாப்ஸி?!


* இனி தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் நடித்த ‘வாஷி’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ‘சர்க்காரு வாரி பாதா’ ஆகிய படங்கள் ரிலீஸூக்கு வெயிட்டிங். தவிர, தெலுங்கில் சிரஞ்சீவி, நானியின் படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் கீர்த்தி, தமிழில் உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் தவிர, ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். அதை ‘இரும்புத்திரை’ படத்திற்கு வசனம் எழுதிய ஆண்டனி இயக்குகிறார்.

61aee77e53b0d
கீர்த்தி சுரேஷ்

* வரலட்சுமி சரத்குமார் கிட்டத்தட்டச் சென்னையைக் காலி செய்துவிட்டு ஹைதராபாத்திற்குப் போய்விட்டார். அப்பாவுக்கும் மகளுக்குமான பேச்சுவார்த்தை முற்றித்தான் கோபித்துக் கொண்டு போய்விட்டதாகச் செய்தி பரவியது. விசாரித்தால் அப்பா, ராதிகா, சாயா அம்மா மூவரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுதான் ஹைதராபாத்துக்கு வீட்டை மாற்றி இருக்கிறாராம். இந்தக் கோடை விடுமுறையை மொத்த குடும்பமும் அவருடைய புதிய வீட்டில் ஒரு வாரம் கொண்டாடப் போகிறதாம்.

* அடுத்த படத்திற்காக டாப்ஸியை அழைத்திருக்கிறார் வெற்றிமாறன். ‘வணக்கம்’ சொல்லிவிட்டு ‘சாரி’ என்று சொல்லிவிட்டாராம் டாப்ஸி. ‘இந்தியில் பயங்கர பிஸி. இவ்வளவு நாள் கால்ஷீட் ஒதுக்க முடியாது’ என்று காரணம் காட்டிவிட்டாராம். சொந்தமாகப் படம் தயாரிக்க ரெடியாகும் டாப்ஸியின் கால்ஷீட் இப்போது மும்பைக்காரர்களுக்கே கிடைப்பதில்லை. ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி படத்திலும் நாயகி அவரே! அவர் தொட்டது எல்லாம் துலங்குவது ஒரு காரணம் என்கிறார்கள்.

tapsee hero
டாப்ஸி

* தற்போதைக்கு இந்தி, தெலுங்கில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சமந்தா. அதற்காகவே மூன்று கதை கேட்டு இந்தியில் ஓகே சொல்லி வைத்திருக்கிறார். கணிசமான சம்பளம் கொடுத்தால் வெப்சீரிஸ்க்கும் ஒப்புக்கொள்ள ரெடியாகி விட்டார். அதனால் ஹைதராபாத்திலும் மும்பையிலும் இரண்டு பிளாட்களை வாங்கி போடத் தீர்மானித்து விட்டதால் அவரது நண்பர்கள் தீவிரமாக இடம் தேடுகிறார்கள். பல்லாவரம் சமந்தா இனி மும்பை சமந்தாதான் என்கிறார்கள். கூடவே ஹாலிவுட் வரைக்கும் கமிட்டாகி உள்ளதால் அங்கேயும் போக தயாராகிவிட்டார். பிரியங்கா சோப்ரா மாதிரி இடம்பெயர்தல் வரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.

Ugntitled 1
சமந்தா

* இனிமேல் மூன்று வருடங்களுக்கு ஒரு படமாவது இயக்கலாம் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார் மோகன்லால். இப்போது ‘பரோஸ்: நிதி காக்கும் பூதம்’ (Barroz: Guardian of D’Gama’s Treasure) என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் எடுத்து வருகிறார். உடன் நடித்தவர்கள் அவரின் இயக்கும் திறமையை வியக்கிறார்கள். 44 ஆண்டுகளாக மோகன்லால் சினிமாவில் இருந்தாலும் இப்போதுதான் டைரக்‌ஷன் பக்கம் வந்திருக்கிறார். இப்போது இந்தப் படத்தைப் பார்க்காமலேயே பெரும் பணம் கொடுத்து ஏரியா உரிமையை வாங்க முயற்சி நடக்கிறது.

* ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘துருவநட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார் விக்ரம். அடுத்து பா.இரஞ்சித்தின் படத்திற்குச் செல்கிறார். இரஞ்சித் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதால், கிடைத்த இடைவெளியில் ஸ்காட்லாந்துக்கு ஃபேமிலி ட்ரிப் அடித்திருக்கிறார் விக்ரம். ‘இருமுகன்’ படத்திலிருந்து ‘மகான்’வரை தொடர்ந்து ஓய்வில்லாமல் நடித்ததில் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காததால் இந்தத் திடீர் ட்ரிப்பாம்!

pa ranjith2
விக்ரம் 61 கூட்டணி

* பிரமாண்ட இயக்குநருடன் இரண்டாவது முறையாகக் கைகோத்திருந்தார் அந்த ஒளிப்பதிவாளர். சமீபத்தில் கூட பிரகாச நடிகரின் படத்தில் வேலை செய்திருந்தார். இப்போது அவருக்கு என்ன எனக் கேட்கிறீர்களா? டோலிவுட்டில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பணியாற்றியவர் அவர். அப்படியான தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததில், அங்கே அவருக்குக் கெத்து பெயர் இருக்கிறது. அதனால் பான் இந்தியா பட வாய்ப்புக்கள் அவரைத் தேடி வந்தும், அதற்காக தேதிகள் ஒதுக்க முடியாமல் தவிக்கிறார். காரணம், பான் இந்தியப் படங்களில் கமிட்டானால், குறைந்தது இரண்டு மூன்று வருடங்களாவது அதில் பணியாற்ற வேண்டியிருக்கும். அப்படியான சூழலில் திடீரென பாதியில் நிற்கும் படத்தைப் பிரமாண்ட இயக்குநர் ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து இதற்கு வரமுடியாமல் போய்விடும். இதனால் என்ன செய்வது எனப் புரியாமல் தவிக்கிறாராம் அந்த ஒளிப்பதிவாளர்.

wra
மஞ்சு வாரியர்

* ‘அஜித் 61’ படத்தில் ஏகே டபுள் ஆக்‌ஷன் என முன்பே சொல்லியிருந்தோம். படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்ற பேச்சு இருந்து வந்தது. அதில் தபுவுக்குப் பதிலாக இப்போது மஞ்சு வாரியாரை கமிட் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஐதராபாத்தில் நடக்கும் இதன் படப்பிடிப்பில் அடுத்த வாரம் மஞ்சு வாரியர் பங்கேற்பார் என்றும், ரகுல் ப்ரீத் சிங்கின் போர்ஷன் அதற்கு அடுத்த வாரம் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.Source link

cinema.vikatan.com

கோலிவுட் ஸ்பைடர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds