கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்ட நடிகர் விமல் | Actor Vemal got Vaccinated today

0
12
கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்ட நடிகர் விமல் | Actor Vemal got Vaccinated today


கதாநாயகன் அந்தஸ்து

கதாநாயகன் அந்தஸ்து

கில்லி, கிரீடம், குருவி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள நடிகர் விமல், பசங்க படத்தின்மூலம் தன்னை நாயகனாக உயர்த்திக் கொண்டார். தொடர்ந்து களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா படங்கள் இவரது கதாநாயகன் அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளன.

புகைப்படங்கள் பகிர்ந்த விமல்

புகைப்படங்கள் பகிர்ந்த விமல்

தற்போது குலசாமி, களவாணி 2, சண்டக்காரி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் விமல், கொரோனா காரணமாக சூட்டிங் இன்றி வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகளின் பிறந்தநாளை தன்னுடைய வீட்டிலேயே கொண்டாடி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

முதல் தவணை

முதல் தவணை

இன்னிலையில் தற்போது தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை அவர் போட்டுள்ளார். இதுகுறித்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தான் தடுப்பூசி போட்ட புகைப்படத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாறுபட்ட வேடத்தில் விமல்

மாறுபட்ட வேடத்தில் விமல்

விமல் நடிப்பில் உருவாகிவரும் குலசாமி படத்தின் ஸ்டில்கள் இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் வித்தியாசமான விமலை பார்க்க முடிந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் தான் நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here